யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

  • சென்னை: "யாரு சட்டமன்ற உறுப்பினர்.. யாரு அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஒரு ஆட்சி தான்" தற்போது நடந்து கொண்டு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இப்போது அமைச்சராக பொறுப்பேற்றவர்களுக்கு அவர்களுக்கு எந்த துறை என்றே தெரியவில்லை எனவும் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- இப்போ இருக்கின்ற ஆளுங்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த 108 தொகுதிகளில் சில தொகுதிகளை தவிர 106 தொகுதிகளில் ஓட்டு போட்ட மக்களுக்கு யாரு சட்டமன்ற உறுப்பினர் என்று தெரியாது. மக்களுக்கு மட்டும் இல்லை, இப்போ இருக்கக் கூடிய முதல்வருக்கே யாரு சட்டமன்ற உறுப்பினர், யாரு அமைச்சர் என்றே தெரியாது.. நான் சவால் விடுகின்றேன்.

    Advertisement

    ஷோபா மாடல் அரசின் லட்சணம்

    நான்கு நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் நைட்டு புல்லா கரண்ட் இல்லை. மக்கள் எல்லாம் சாலையில் இறங்கி போராடினார்கள். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் நிருபர்கள் கேட்கிறார்கள். ஏன் சாலை மறியல் செய்றீங்க.. சட்டமன்ற உறுப்பினர் யார் என்று பார்த்து அவர்களிடம் கோரிக்கை வைக்க வேண்டியது தானே என கேட்கிறார்கள். அதற்கு மக்கள், "எங்கள் தொகுதி எம்.எல்.ஏ யார் என்றே தெரியாது.. தெரிந்தால் தானே அவங்ககிட்ட போய் பேச முடியும்" என்று. இது தான் இந்த ஷோபா மாடல் அரசின் லட்சணம்.

    Advertisement

    அமைச்சருக்கு தொகுதி எது என்றே தெரியல

    அதாவது ஓட்டு போட்ட மக்களுக்கு அவங்க எம்.எல்.ஏ யார் என்று தெரியல.. எம்.எல்.ஏக்களுக்கு நாம் எந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றோம் என தெரியல.. நேற்று ஒரு அமைச்சர் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்கிறார். அப்போது அந்த மக்கள், "நீங்க எங்க தொகுதி இல்லை. பக்கத்து தொகுதி" என்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஷோபா மாடல் ஆட்சி தான் நடக்கிறது. இதை நான் சொல்லவில்லை. தொலைக்காட்சியில் வருகிறது.

    அவங்க எம்.எல்.ஏக்கள் யார் என்றால், போதை விற்றவர், கஞ்சா விற்றவர், மனைவியை கொடுமைப்படுத்தி வீட்டில் வைத்து அடித்தவர், சினிமா படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் விற்றவர், புது படத்திற்கு திருட்டு விசிடி விற்றவர், ஜோசியத்தால் கேன்சரை குணப்படுத்த முடியும் என்று சொன்னவர், வேட்பாளர் அறிவிப்புக்கு கடைசி 5 நாள் முன்னாடி தவெகவுக்கு வந்தவர், லாட்டரி டிக்கெட் விற்றவர்.. இவங்க எல்லாம் இப்போ ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள். இவங்க பெயரும் முதல்வர் விஜய்க்கு தெரியாது.

    Advertisement

    சர்க்கஸ் கூடாரமாகிவிடும்

    இன்னொரு கொடுமை என்னவென்று தெரியுமா? இப்போது அமைச்சராக பொறுப்பேற்றவர்களுக்கு அவர்களுக்கு எந்த துறை என்றே தெரியவில்லை. ஒரு அமைச்சர் சொல்கிறார் சுற்றுலாத் துறையா அல்லது சுற்றுச்சூழல் துறையா என்று. இந்த மாதிரி கேடுகெட்ட ஆட்சியை எங்காவது பார்த்து இருக்கீங்களா?

    ஒரு பழமொழி சொல்வார்கள்.. ஒரு கோமாளி அரண்மனைக்கு போகின்றதாலேயே அவன் அரசன் ஆகிவிடமாட்டான்.. அந்த அரண்மனை தான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும் என்று.. இப்போது அது தான் நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் ஒரு கோமாளி இல்லை.. 13 கோமாளிகள்.. ரம்மியில் சொல்வார்கள் இல்லையா.. 13-ம் ஜோக்கராக இருந்தால் என்னய்யா செய்யுறது என்று.. அப்படித்தான் இப்போ ஆட்சி நடக்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.

    English Summary

    Udhayanidhi Stalin launched a sharp attack on the ruling government, claiming that voters are unaware of their MLAs and ministers. He alleged administrative confusion and questioned the functioning of the newly formed government.