கேரியரின் உச்சத்தில் ஆரம்பித்து பியூஸ் கேரியரில் முடிந்திருக்கிறது இந்த ஆட்சி.. சட்டசபையில் விட்டு விளாசிய உதயநிதி


  • சென்னை: கேரியரின் உச்சத்தில் ஆரம்பித்து டிஃபென் கேரியரில் போயி நின்னு.. இப்போ பியூஸ் கேரியரில் போய் முடிந்திருக்கிறது இந்த ஆட்சி என சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை விமர்சித்துள்ளார்.

    Advertisement

    முன்பெல்லாம் புயல், மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை கொடுப்பாங்க.. ஆனால் தற்போது கரண்ட் இல்லையென்று பள்ளிக்கு விடுமுறை விட ஆரம்பித்துள்ளனர் என மின்வெட்டு பிரச்சனை குறித்தும் உதயநிதி பேசினார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    Advertisement

    கரண்ட் இல்லை என்றாலே ஸ்கூல் லீவு

    "முன்பெல்லாம் புயல், மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை கொடுப்பாங்க.. ஆனால் தற்போது கரண்ட் இல்லையென்று பள்ளிக்கு விடுமுறை விட ஆரம்பித்துள்ளனர். கடந்த ஜூன் 9 ஆம் தேதி அன்று சென்னை பெரம்பூர், வியாசர்பாடியில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கு கரண்ட் இல்லை என்று விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. முன்பெல்லாம் டிவியை ஆன் செய்து பள்ளி விடுமுறையா இல்லையா என தெரிஞ்சுகொள்வார்கள். ஆனால் இப்போது கரண்ட் இல்லை என்றாலே ஸ்கூல் லீவு என தெரிந்துகொள்கிறார்கள். எனவே ஒரு மிகப்பெரிய அட்வான்ஸ் டெக்னாலஜியை இந்த அரசு உருவாக்கி இருக்கு.

    Advertisement

    எதிர்க்கட்சியான எங்க பொதுக்கூட்டத்தில் தான் கரண்ட் கட் ஆகுது என நான் நினைத்தேன். அப்போது தான் அவர்களது அமைச்சரவையிலேயே பங்குபெற்றுள்ள திருமாளவன் ஆபிசிலும் அப்படி தான் இருக்கு. ப் சிதம்பரம் அவரை சென்று பார்க்கும் போது கரண்ட் இல்லை என அவர்களே தெரிவித்து இருக்கிறார்கள். சுமார் 1 மணி நேரம் பேசினார்களாம். கரண்ட் இல்லாததால் ஏசி ஓடாமல் வியர்க்க வியர்க்க பேசிக்கொண்டிருந்தோம் என திருமாவளவனே சொல்லியிருந்தார். 2 நாட்களுக்கு முன்னாடி ஆளுங்கட்சி தலைமையகத்திலேயே கரண்ட் இல்லை. அங்க வந்தவங்க எல்லாம், ஆளுங்கட்சியாக இருந்தும் பனையூரிலேயே பவர் இல்லையே என புலம்பிவிட்டு போனதாக தகவல் வந்தது.

    Advertisement

    கேரியரின் உச்சத்தில் ஆரம்பித்து..

    ஆக மொத்தம் தமிழ்நாடு இன்னிக்கு லிட்டரலா ஒரு இருட்டுல மூழ்கி கிடக்கு.. இதனால் பல நிறுவனங்கள் மூழ்கி கிடக்கின்றன. குறு, சிறு நிறுவனங்கள் எல்லாம் என்ன பண்ண என்று தெரியாமல் தவித்து கிடக்கின்றனர். மின்வெட்டால் மோட்டார் பம்பு செட் போட முடியாமல் விவசாயிகளும் விவசாயம் பண்ண முடியலை என போராடிக் கொண்டு இருக்கிறார்கள். மின்வெட்டுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளக்கத்தை ஆளும் அரசு சொல்லி வருகிறது. லோடு அதிகமாக இருக்கு என சொன்னாங்க.. இப்போ ஒரு படி மேலே போய் பியூஸ் கேரியரை திருடிவிட்டு போகிறாங்க என சொல்லிட்டு இருக்காங்க..

    Advertisement

    இப்படி சொன்னதும் மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி ஆதவன் டி ஒரு பதிவினை போட்டு இருக்கிறார்.. அதில், கேரியரின் உச்சத்தில் ஆரம்பித்து டிஃபென் கேரியரில் போயி நின்னு.. இப்போ பியூஸ் கேரியரில் போய் முடிந்திருக்கிறது இந்த ஆட்சி" என்று சொல்லியிருக்கிறார். பவர் கட்டுக்கு இவங்க சொன்ன காரணத்தை மக்கள் ஏற்கவில்லை என தெரிஞ்சதும், திமுக தான் காரணம் என சொல்லிவிட்டாங்க. இப்படி பழி போடுவதில் காட்டும் வேகத்தை பவரை மீண்டும் கொண்டு வருவதில் காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    எங்க ஆட்சியில் ஏற்படாத மின்வெட்டு இப்போது மட்டும் தொடர்சியாக ஏற்பட என்ன காரணம்.. அரசின் நிர்வாகத் திறமையின்மையா, இல்லை டெக்னிக்கல் குளறுபடிகளா? இதை தீர்க்க என்ன நடவடிக்கை என்ன? இந்த மின்வெட்டு பிரச்சனை எத்தனை நாள் தான் தொடரும் என்பதை முதல்வர் சொல்ல வேண்டும்.. இவ்வாறு அவர் கூறினார்.

    English Summary

    Udhayanidhi Stalin criticized the Tamil Nadu government in the Assembly, saying its journey began at the peak but has now ended in a “blown fuse carrier.” He also attacked the administration over power cuts, alleging schools are being closed due to electricity shortages.