CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

  • தமிழ்நாட்டில் ஆளும் விஜய் தலைமையிலான தவெக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாக எதிர்கட்சி தலைவரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    Advertisement

    முதலமைச்சர் விஜய் நேற்று சிறு விவசாயிகளுக்கு 50000 ரூபாய் மதிப்பிலான கடனுக்கு 100 சதவீத தள்ளுபடியும், குறு விவசாயிகளுக்கு 50000 ரூபாய் கடனுக்கு 25000 ரூபாய் வரையிலான தள்ளுபடி, பெரு விவசாயிகளுக்கு தலா 5000 ரூபாய் அளவிலான தொகைக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருந்தது.

    Advertisement

    இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என சுட்டிக்காட்டி உதயநிதி ஸ்டாலின் முக்கியமான பதிவை வெளியிட்டுள்ளார்.

    பயிர்கடனில் நம்பிக்கை மோசடி

    தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என தவெக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அரசு அறிவித்துள்ள திட்டத்தில் ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந்த முடிவு விவசாய சமூகத்தினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார். முழுமையான கடன் தள்ளுபடி அறிவிக்காதது சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடைய முடியாத நிலை உருவாகியுள்ளது. இது விஜய் அரசின் மாபெரும் நம்பிக்கை மோசடி என்று அவர் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மின்சார வாக்குறுதியிலும் ஏமாற்றுவேலை

    இதேபோல், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் என்ற வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு இந்த சலுகை கிடைக்காது என்ற அறிவிப்பு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அனைவருக்கும் 200 யூனிட் இலவசம் என்பது தான் விஜய் தலைமையிலான தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியாகும். இந்த இரு விவகாரங்களும் அரசின் கொள்கைகளில் உள்ள முரண்பாட்டு என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    CM saar?

    தமிழ்நாட்டில் விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கும் நிலையில், கடன் தள்ளுபடி திட்டம் பல லட்சம் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும். அதிக கடன் சுமையில் இருக்கும் விவசாயிகள் இந்த வரம்பு காரணமாக முழு நிவாரணம் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இது அவர்களின் பயிர் உற்பத்தி மற்றும் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், "இப்படி இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?" என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாய அமைப்புகளும் இந்த விவகாரத்தில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றன.

    English Summary

    DMK Youth Wing Secretary Udhayanidhi Stalin has strongly criticized the Tamil Nadu government led by Chief Minister Vijay, accusing it of deceiving farmers by limiting crop loan waiver to only ₹50,000 instead of the promised full waiver up to 5 acres. He compared this to the broken free electricity promise, calling it a major betrayal and scam affecting lakhs of farmers in the state.