சென்னை: "பிரதமர் வேட்பாளர் விஜய் என்று சொல்வது தற்போது தவெகவில் குறைந்துள்ளது. காரணம் கூட்டணியிலுள்ள காங்கிரசுக்கு, 2 தொகுதிகளிலும் உள்ள ஓட்டுக்கள் தவெகவுக்கு தேவைப்படும். ஒருவேளை 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுவிட்டால், மறுபடியும் "பிரதமர் வேட்பாளர் விஜய்" என்று ஆரம்பித்துவிடுவார்கள்" என்று கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி.
பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் மணி, "திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க முயற்சி செய்தனர் என்று தவெகவினர் மக்களிடம் பிரச்சாரத்தை கொண்டு செல்கிறார்கள்.. இதுஉண்மை..
எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் போன்றோர் மறுத்தாலும், இதுதான் உண்மை.. இதற்கு பல பேர் சாட்சி. எம்ஏ பேபி, வீரபாண்டியன், காதர் மொய்தீன், திருமாவளவன், திமுகவுடனிருந்த எல்லாருமே இதற்கு சாட்சி.. அதைதான் இன்று மக்களிடம் கொண்டு போய் தவெகவினர் உடைக்கிறார்கள்.
அதிமுக ஏன் உடைந்தது ஏன் அதிமுக உடைந்து போனது? ஏன் அதிமுக தோற்று போனது? திமுகவுடன் நெருங்கியதுதான் காரணம்.. எடப்பாடியை முதலமைச்சராக்க திமுக முயற்சி செய்த விஷயம், இந்து நாளிதழில் முதல் பக்கத்திலேயே செய்தியாக வெளியானது.. அதற்கு அதிமுக மறுப்பு சொல்லவேயில்லை, திமுக பட்டும்படாமல் அதை மறுத்தது.. அதனால்தான், சத்யபாமா ராஜினாமா செய்வதாக சொல்கிறார். தாராபுரம், மதுராந்தகம் இந்த 2 தொகுதிகளிலுமே அதிமுக-தவெகவுக்குதான் போட்டி.. 3வது இடம்தான் திமுகவுக்கு.. காரணம் திமுகவுடன் யாருடனும் இல்லை.. தேமுதிக மட்டும்தான் உள்ளது.. அதனால் வாக்கு வங்கி திமுகவுக்கு குறைவாக உள்ளது.. ஐயூஎம்எல், காங்கிரஸ், விசிக, மதிமுக அத்தனை பேரும் வெளியே வந்துவிட்டார்கள்.. எனவே தவெக Vs அதிமுகவாக களம் உள்ளது.. ஏதாவது அதிசயம் நடந்தால் திமுக, 2வது இடத்துக்கு வரலாம். தனிமரம் திமுக தனிமரமாக திமுக உள்ளது.. தாங்கள் பலவீனமாக இல்லை, தாங்களும் களத்தில் நிற்கிறோம் என்பதை காட்டிக்கொள்ளவே திமுக களமிறங்கி உள்ளது.. வெற்றி என்பது திமுகவின் நோக்கமும் இல்லை. 2 தொகுதிகளும் அதிமுக கோட்டை.. 2 தொகுதிகளிலும் தவெகவுக்கு எதிர்ப்பு உள்ளதாக தெரிகிறது.. விஜய்யின் செல்வாக்கு மட்டுமே தாராபுரத்தில் தவெகவை கரையேற்ற முடியும்.. பிரதமர் வேட்பாளர் விஜய் என்று சொல்வது தற்போது தவெகவில் குறைந்துள்ளது. காரணம் கூட்டணியிலுள்ள காங்கிரசுக்கு, 2 தொகுதிகளிலும் உள்ள ஓட்டுக்கள் தவெகவுக்கு தேவைப்படும். ஒருவேளை 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுவிட்டால், மறுபடியும் "பிரதமர் வேட்பாளர் விஜய்" என்று ஆரம்பித்துவிடுவார்கள். விஜய் அரசுக்கு சுப்ரீம்கோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது.. நீதிபதிகள் பெரும்பாலும் இப்படி சொல்ல மாட்டார்கள்.. ஏன் இப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், இது தவெகவுக்கு பூஸ்ட் தரக்கூடிய விஷயம்தான். இந்தியா கூட்டணி டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி, கூட்டத்தில் தவெகவின் கூட்டணி கட்சிகள் பங்கேற்றன. ஆனால் தவெக பங்கேற்கவில்லை. இதற்கு காரணம், மோடியை பகைத்து கொள்ள தவெக அஞ்சுகிறது.. மாநில அரசுக்கு மத்திய அரசின் உதவி தேவை என்பதால், அப்படி பகைத்து கொள்ள விரும்பவில்லை.. ஆனால் இதை வெளிப்படையாக சொல்லாமல், தங்களிடம் எம்பி இல்லை என்பதால் கலந்து கொள்ளவில்லை என்றெல்லாம் வெறும் சாக்கு போக்கு சொல்லியுள்ளார்கள். இது காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கும் தெரியும். ஆபாச பேச்சு - இரட்டை அர்த்தம் "திமுகவில் ஆபாச பேச்சு, இரட்டை அர்த்த பேச்சுக்கள் பேசப்படுவதாக கூறுகிறார்கள், ஆனால் தவெகவிலும் ஆபாசமாக பேசக்கூடியவர்கள் இருக்கிறார்கள்தானே? திமுகவை மட்டும் குறை சொல்வது ஏன்? தவெகவில் அசிங்கமாக பேசுபவர்களை விஜய் ஏன் கண்டிக்க மறுக்கிறார்" என்று கேட்கிறீர்கள்.. இடதுசாரிகள் தவிர, அனைத்து கட்சிகளிலுமே ஆபாசமாக பேசுகிறார்கள்.. அதிமுக, காங்கிரஸ், மதிமுக, ஐயூஎம்எல், பாமக, விசிக, என எந்த கட்சியாக இருந்தாலும், ஆபாசமாக பேசுபவர்கள் உள்ளனர்.. ஆனால், அப்படி பேசுவது கட்சியின் 2ம் கட்ட தலைவர்களா? தொண்டர்களா? அல்லது கட்சி தலைவர்களே பேசுகிறார்களா? உதயநிதி ஸ்டாலின் திமுகவில் மட்டும் தலைமையே அப்படி பேசுகிறதே? திமுக மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் உதயநிதிதான் முதலமைச்சர்.. தவெகவில் கட்சிக்காரர்கள் பேசுவதற்கும், உதயநிதி பேசுவதற்கும் வித்தியாசம் உள்ளது.. இரண்டையும் நியாயப்படுத்த முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கக்கூடிய தண்டிக்கக்கூடிய சட்டங்களின்படி பார்த்தால், இரட்டை அர்த்தத்தில் யார் பேசினாலும் அது குற்றம்தான்.. இது சட்டப்பிரச்சனை அல்ல, தனிமனித கண்ணியம், கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனை.. இதை மக்கள் மன்றத்தில்தான் விவாதிக்க வேண்டுமே தவிர, சட்டப்படி அல்ல. சுதந்திர இந்தியாவில், ஆபாச பேச்சுக்காக, திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.. பாஜகவின் குஷ்பு, அன்றைய ரவி ஆளுநர் ரவி பற்றி மோசமாக பேசி, அதற்காக விசாரணையும் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு, ஒரு வருட சிறைத்தண்டனையும் பெற்றார்.. ஆனால் இன்னமும் அவரை கட்சியில் வைத்துள்ளது திமுக.. அவரும் இன்னமும் அதேபோல பேசிகொண்டுதான் இருக்கிறார். இப்படி பேசுவது கட்சியை வளர்க்கும் என்று திமுகவினர் நினைக்கிறார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.