உதயநிதி ஸ்டாலின் சொன்ன சொல்.. டம்மி முதல்வர், டெல்லியின் அடிமை.. CJP போராட்டத்திலும் தவெகவை விடலயே

  • சென்னை: டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி நடந்த போராட்டம் இப்போது தமிழ்நாட்டிலும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.. டெல்லியில் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் என திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், அப்படி என்ன நடந்தது?

    Advertisement

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    Advertisement

    மேலும், மற்ற 2 தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன. எனவே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளன. ஏற்கனவே ஆம் ஆத்மி, மாணவர் அமைப்புகள், காங்கிரஸ் உள்ளிட்டவை டெல்லியில் போராட்டம் நடத்தியுள்ளன.

    விமானத்திலேயே கைது

    இந்த நிலையில், ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அழைப்பு விடுத்தது. ஆனால், போலீசார் அனுமதி மறுத்ததால், போராட்டத்துக்கு வந்த இளைஞர்களைக் கைது செய்யத் தொடங்கினார்கள்.. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    போராட்டத்தில் பங்கேற்க விமானத்தில் டெல்லி வந்த கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் செய்தித் தொடர்பாளர் அஷுதோஷ் ரங்காவை, ஃபிளைட் தரையிறங்கியதும் உள்ளேயே புகுந்து போலீசார் கைது செய்தனர். விமானத்திலிருந்து இறங்கக்கூட அனுமதிக்கவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்த அபிஜித் தீப்கே, அவசரநிலைக் காலத்தில் இந்திரா காந்தி ஆட்சியில்கூட இப்படி நடந்ததில்லை என்று கொந்தளித்துள்ளார்..

    இந்த நடவடிக்கைகளுக்கு சிபிஎம் கட்சியின் ஜான் பிரிட்டாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லி முழுவதும் அமித் ஷாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைப் போன்ற சூழல் நிலவுவதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

    "இதுதான் ஜனநாயகமா? இங்கே என்னதான் நடக்கிறது?" என்று கேள்வி எழுப்பிய ஜான் பிரிட்டாஸ், மத்திய அரசு இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், இந்தப் போராட்டம் அரசை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசும் அளவுக்குப் பெரிய மக்கள் போராட்டமாக மாறும் என்றும் எச்சரித்துள்ளார்.

    Advertisement

    சென்னையிலும் கைது

    டெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னையிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெசன்ட் நகரில் போராடிய 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல், சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் போராடியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதைப் பார்க்கும்போது ஒன்று மட்டும்தான் உறுதியாகிறது. டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக!" என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement
    டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை விஜய்! ஞானேஷ் குமாருக்கு எதிராக போராடினால் கைதா? உதயநிதி கேள்வி

    உதயநிதி ஸ்டாலின் காட்டம்

    இதேபோல், பெசன்ட் நகரில் அமைதியாகப் போராடிய இளைஞர்களைக் கைது செய்ததற்கு திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தக் கைதுகள் மூலம் தமிழ்நாடு அரசு டெல்லிக்கு அடிபணிந்து செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    "தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்

    Advertisement

    ஒட்டுமொத்த நாடும் - இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் போது, இந்த Dummy முதலமைச்சர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்.

    சுயமரியாதையும் - நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதலமைச்சர் நிரூபித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் தொடங்கிய போராட்டம், அதற்கு ஜான் பிரிட்டாஸ் தெரிவித்த எதிர்ப்பு, தமிழ்நாட்டில் நடந்த கைதுகள், கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலினின் கண்டனங்கள் என இந்த விவகாரம் தற்போது அரசியல் விவாதமாக மாறியுள்ளது....!!!

    English Summary

    Udhayanidhi Stalin Stunning Attack.. Dummy CM, Delhi Slave.. TVK Targeted Over CJP Protest