கட்சியினரை மெத் கடத்தவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா? உதயநிதி ஸ்டாலின்!

  • சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்த முயன்ற தவெக நிர்வாகி பூபாலன் கைதாகி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் Drugs-ஐ விடு, Sports-ஐ எடு' என்றுஇ மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்கள், 'முதல்வர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு என்று செயல்படுவதாகவும் சாடியுள்ளார்.

    Advertisement

    இலங்கையில் இருந்து சர்வதேச அளவில் கடத்தப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி பூபாலனுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தவெக நிர்வாகி பூபாலனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.

    Advertisement

    சுமார் 8 மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில், 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் தவெக நிர்வாகி பூபாலன் மற்றும் அவரின் நண்பர் சுகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதமாகி இருக்கிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வேதாரண்யத்தில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 135 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற தவெக நிர்வாகி பூபாலனை மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

    Advertisement

    'முதலமைச்சர் Drugs-ஐ விடு Sports-ஐ எடு' என்று மாரத்தான் ஓடினால், அவரது கட்சிக்காரர்கள், 'முதலமைச்சர் சொல்வதை விடு, Drugs-ஐ எடு' என்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட பூபாலனிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவர் ECR வழியாக பயணித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

    அப்படியென்றால், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? யார் யாரிடமிருந்து போதைப்பொருளை பெற்றார்? இலங்கை தவிர்த்து வேறு எங்கெல்லாம் விற்பனை செய்ய இருந்தார்? ஆளுங்கட்சியின் பவர் சென்டர்களுக்கு பங்கு கொடுப்பதால் தான் இவ்வளவு தைரியமாக போதைப்பொருள் கடத்துகிறாரா?

    Advertisement

    ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருளை ஒழிப்பேன் என்று சொன்ன Dummy முதலமைச்சர், தன் கட்சிக்காரர்களையே போதைப்பொருள் கடத்தவிட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் அவரது போதைப்பொருள் ஒழிப்பு லட்சணமா? இந்த வழக்கின் முழுப்பின்னணியையும் ஆராய்ந்து இதன் பின்னால் உள்ள அனைவரது மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்திய அரசின் NIA, ED போன்ற அமைப்புகள் தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    Udhayanidhi Stalin: Udhayanidhi Stalin Shocked Over TVK Leader's Arrest in 135 kg Meth Bust in Tamilnadu