இன்றே விடுவிக்க வேண்டும்.. நீதிபதி போட்ட உத்தரவு.. உதயநிதி ஸ்டாலின் தரப்பு வாதங்கள் என்ன?

  • சென்னை: முதல்வர் குறித்தோ, திரைத்துரையைச் சேர்ந்தவர் குறித்தோ தாம் எவ்வித அவதூறு கருத்தும் கூறவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் வாதிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு பெண்ணின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலோ, இழிவுபடுத்தும் வகையிலோ பேசவில்லை என்றும், தஞ்சையில் பேசியதை, அரசியல் காரணங்களுக்காக தவறான சூழலில் பொருத்தி பிரச்சாரமாக மாற்றி வருகின்றனர் என்றும் வாதிடப்பட்டுள்ளது.

    Advertisement

    தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தஞ்சையில் தவெக மகளிர் அணி நிர்வாகி உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து காலை 9 மணியவிலேயே உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். இதன்பின் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சாவூர் அழைத்து செல்லப்பட்டார். மறுபக்கம் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் கடந்து கொண்டு செல்லப்பட்டார்.

    இதனால் உதயநிதி ஸ்டாலின் ரிமாண்ட் செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான விஜய் நாராயணன், உதயநிதி ஸ்டாலினை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை. விசாரணைக்காகவே தஞ்சைக்கு அழைத்து செல்லப்படுவார் என்று தெரிவித்தார்.

    Advertisement

    இதனை கேட்டுக் கொண்ட நீதிபதி, உதயநிதி ஸ்டாலின் இன்றே விடுவிக்கப்பட வேண்டும். விசாரணையை நாளை வரை கொண்டு செல்ல கூடாது. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன்பின் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

    அதில், முதல்வர் குறித்தோ, திரைத்துரையைச் சேர்ந்தவர் குறித்தோ தாம் எவ்வித அவதூறு கருத்தும் கூறவில்லை. ஒரு பெண்ணின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலோ, இழிவுபடுத்தும் வகையிலோ பேசவில்லை. தஞ்சையில் பேசியதை, அரசியல் காரணங்களுக்காக தவறான சூழலில் பொருத்தி பிரச்சாரமாக மாற்றி வருகின்றனர் என்று வாதிடப்பட்டுள்ளது.

    English Summary

    Udhayanidhi Stalin: Udhayanidhi Stalin Tells High Court He Made No Defamatory Remarks Against CM or Actor