யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம்

  • சென்னை: சட்டமன்ற தேர்தல் தோல்வி தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட திமுக தோல்வியடைந்தது. தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணியும் உடைந்துவிட்டது. தவெக அரசு மீது திமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறது. முதலமைச்சர் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுக ஆட்சி சாதனைகளை பட்டியலிட்டு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர் என்று உதயநிதி விமர்சித்துள்ளார்.

    Advertisement

    எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது.

    Advertisement

    லைசன்டாக திரும்பியுள்ளார்

    இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதம் மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு - சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் - மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார். இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளா என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

    தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சனை பற்றி வாய் திறக்காமல் - நமக்கெதுக்கு வம்பு என்று சைலன்டாக திரும்பி இருக்கிறார்.

    Advertisement

    Sofa Model அரசு

    மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது சி.எம் சார். உண்மை நிச்சயம் வெல்லும்" என்று கூறியுள்ளார். உதயநிதியின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English Summary

    Udhyanidhi Stalin: Udhyanidhi stalin said, CM Vijay fixed sticker for DMK in Niti Ayog meeting. He also claimed TVK government will not run for long.