சென்னை: சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. தவெக, திமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இருவரும் பரஸ்பரம் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். சட்டமன்றத்தில் உள்துறை, மதுவிலக்கு, போக்குவரத்து, வீட்டு வசதித்துறை மானிய கோரிக்கை தொடங்கியது.
சட்டமன்றத்தில் உள்துறை, மதுவிலக்கு, போக்குவரத்து, வீட்டு வசதித்துறை மானிய கோரிக்கை தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசுகையில், அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என கடந்த 3 மாதங்களில் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இந்த அரசு அமைந்ததில் இரந்து அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
மே மாதம் ஒரு கிலோ அரிசி ரூ. 55க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ. 75க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ. 40 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிலோ ரூ. 80க்கும், துவரம் பருப்பு ரூ. 150 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ரூ. 180க்கும், 1 கிலோ சர்க்கரை ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ. 70 வரை உயர்ந்திருக்கிறது. இதனால, மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளதோடு மளிகை கடை பக்கம் போவதையே நிறுத்தியுள்ளனர். ஆளுங்கட்சியில் இருக்கக்கூடிய கம்யூனிஸ் கட்சித் தோழர்கள் இதைக் கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2007 ஆம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டது. 2007 ஆம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டது. அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி தமிழக மக்கள் பாதிக்கப்படாது என்பதற்காக சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை அறிவித்தனர். அந்தத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடை மூலமாக பருப்பு, எண்ணெய், ரவா உள்ளிட்ட பொருள்களை சந்தை விலையை விட குறைந்த விலைக்கு வழங்கினர். கடு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட 10 பொருள்களை 50 ரூபாய்க்கு வழங்கினார்கள். கருணாநிதி 2007 இல் தொடங்கி வைத்த சிறப்பு பொது விநியோகத் திட்டம் இன்று வரை நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருள்களை தற்போது வழங்கப்படும் அளவை விட கூடுதல் அளவு வழங்கிட ஆவண செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி விலைவாசி உயர்வு பிரச்சனைக்கு இந்த அரசு உடனடியாக நல்ல தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.