இளைஞரணிக்கு மாவட்டச் செயலாளர் பதவி.. பரிந்துரைத்து உதயநிதி கொடுத்த கடிதம்.. ஸ்டாலினிடம் எடுபடுமா?

  • சென்னை: திமுகவில் மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக பரிந்துரை கடிதம் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். ஆனால் அவை ஸ்டாலினால் ஏற்கப்படுமா என்பது தான் கேள்வியாக உள்ளது.

    Advertisement

    திமுகவில் திடீரென மறுசீரமைப்பு பணிகள் மின்னல் வேகம் எடுத்துள்ளன. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முடிந்த வரை முடிக்க வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே ஆகஸ்ட் 28ஆம் தேதி திமுக மாவட்டங்களின் எண்ணிக்கையை 110ஆக பிரித்து அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    ஆனால் இந்த மாவட்டங்கள் பிரித்த பின் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் திமுக சைலண்ட் மோடுக்கு சென்றது. இடைத்தேர்தல் முடிவடைந்த பின்னரும் கூட எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் மறுசீரமைப்பின் போது பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த பலரும் நிர்வாகிகளை கேட்க தொடங்கிவிட்டனர்.

    இது ஸ்டாலின் காதுகளுக்கு சென்ற பின், உடனடியாக மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க முடிவு செய்தார். கடந்த சில நாட்களாகவே யாரை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கலாம் என்ற ஆலோசனையில் ஸ்டாலின் இருந்து வருகிறார். இதனிடையே இளைஞரணி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பரிந்துரை கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.

    Advertisement

    கட்டாயமாக இளைஞரணியில் இருக்கும் நிர்வாகிகளை மாவட்ட பொறுப்பாளராக கொண்டு வர வேண்டும் என்பதில் உதயநிதி ஸ்டாலின் மும்முரமாக உள்ளார். மறுபக்கம் தென் மாவட்டங்களில் கனிமொழியும் தனது ஆதரவாளர்களை பதவிக்கு கொண்டு வர ஆயத்தமாகி வருகிறார். மாவட்டச் செயலாளர் பதவியை இழக்கும் சீனியர்களும் பரிந்துரை கடிதங்களை வழங்கி இருக்கின்றனர்.

    ஆனால் ஸ்டாலினிடம் இந்த பரிந்துரை கடிதங்கள் எடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மறுசீரமைப்பு குழு தரப்பிலும் மாவட்ட பொறுப்பாளர்கள் தொடர்பாக பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் யாருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி, யாரின் பரிந்துரைகள் கடிதம் ஸ்டாலினிடம் எடுபடும் என்று அறிவாலயத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

    English Summary

    Udhayanithi Stalin Demands Preference for Youth Wing in DMK District Secretary Posts, Decision Rests with Stalin