இது மனித உரிமை மீறல்.. உதயநிதி வீட்டிற்குள் சென்ற போலீஸ்.. கிருத்திகா, மா.சுப்பிரமணியன் வாதம்!

  • சென்னை: சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் வீட்டிற்குள் சென்றுள்ள காவல்துறையினர், அவரின் மனைவி கிருத்திகா மற்றும் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்போது மா.சுப்பிரமணியம், வழக்கறிஞர் வர வேண்டும்.. வழக்கு விபரங்களை கொடுங்கள்.. திடீரென பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய வீடியோ வெளி வந்துள்ளது.

    Advertisement

    தஞ்சையில் காவிரி விவகாரத்தில் வாய் திறக்காத முதல்வர் விஜய்யையும், கர்நாடகாவையும் கண்டித்து திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சர்ச்சையாகியது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சிற்கு தவெக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல் பாஜக மற்றும் அண்ணாமலை தரப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கரந்தை மந்தாரடி தெருவை சேர்ந்த பைரவி என்பவர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார். இதன்பின் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் நீலாங்கரை வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் போலீசார் குவிக்கப்படும் தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக அங்கு வந்தார். இதன்பின் போலீசார் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்குள் வந்த நிலையில், அவரின் மனைவி கிருத்திகா மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    அப்போது காவல்துறை இணை ஆணையர் விஜயகுமார் நேரடியாகவே, உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வந்துள்ளோம் என்று கூறி இருக்கிறார். அதற்கு மா.சுப்பிரமணியன், "பொறுங்கள்.. வழக்கறிஞர் வந்து கொண்டிருக்கிறார்.. வழக்கு விபரங்களை கொடுங்கள்.. திடீரென வந்துள்ளீர்களே.. முன்கூட்டியே தகவல் கொடுத்துள்ளீர்களா.. ஒரு 10 நிமிஷம் மட்டும் டைம் கொடுங்க.. காலைக்கடனை முடிக்காமல் உதயநிதியால் எப்படி வர முடியும்?

    அவர் குளித்துக்கொண்டிருக்கிறார்.. மனித உரிமை மீறல் எல்லாம் வந்துவிடும்" என்று வாக்குவாதம் செய்தார். இதனிடையே திமுக சட்டத்துறை நிர்வாகி பரந்தாமன் போலீசார் தடுப்புகளை மீறி உதயநிதி ஸ்டாலினின் வீட்டிற்குள் சென்றார். அதுமட்டுமல்லாமல் திமுகவினரும் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் குவிய தொடங்கியுள்ளார். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாகி இருக்கிறது. நாளை சட்டசபை கூடவுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English Summary

    Udhayanithi Stalin: Police Hold Talks with Udhayanidhi's Wife Kiruthiga and Ex-Minister Ma. Subramanian at Neelangarai Residence