டார்கெட் இடைத்தேர்தல்.. தவெகவை வீழ்த்த இதுவே வழி.. திட்டமிட்டு காய் நகர்த்தும் உதயநிதி ஸ்டாலின்!

  • சென்னை: முதல்வர் விஜய்யின் இமேஜை டேமேஜ் செய்யும் பணிகளில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். அதற்கான முக்கிய காய் நகர்த்தலாக இடைத்தேர்தல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இடைத்தேர்தலில் தவெகவை வீழ்த்தினாலே, விஜய்யின் இமேஜை டேமேஜ் செய்யலாம் என்பதால், இடைத்தேர்தல் பணிகள் அறிவாலயத்தில் சூடுபிடித்துள்ளது.

    Advertisement

    தவெக ஆட்சிக்கு வந்தபின், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான அதிகாரப் போட்டியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தின் தற்போதைய முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இரு இளம் தலைவர்களுக்கு இடையேயான யுத்தம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    Advertisement

    இந்த அரசியல் யுத்தத்தின் அடுத்தகட்டமாக, வரவிருக்கும் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தான் முதல்வர் விஜய்யின் அரசியல் இமேஜை உடைப்பதற்கான பிரதான ஆயுதமாக இருக்கும் என எதிர்க்கட்சித் தரப்பு நம்புவதாக அறிவாலயத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் திமுகவுக்கு இழப்பதற்கு எதுவும் கிடையாது.

    ஏற்கனவே கூட்டணி கட்சிகள் விலகி சென்றுவிட்ட சூழலில், எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை கூடினாலும் பெரிய மாற்றங்கள் ஏற்படாது. இருந்தாலும் இப்போதே விஜய்யின் இமேஜை மக்கள் மத்தியில் டேமேஜ் செய்தால், அது உள்ளாட்சித் தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலுக்கு பயன்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கருதுகிறார். அதற்காக உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாக இறக்கி இருக்கிறார்.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் ஆட்சி அமைத்த குறுகிய காலத்திலேயே இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக தோற்றால், விஜய்யின் பிம்பம் சுக்குநூறாக உடையும். அது முதல்வர் விஜய்யின் அரசியல் இமேஜுக்குப் மிகப்பெரிய பின்னடைவாக மாறும். தவெக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் கொண்டு சேர்க்க இதுவே சரியான காய் நகர்த்தல் என்று உதயநிதி கருதுகிறார்.

    ஏற்கனவே திருச்சி கிழக்கு பொறுப்பாளராக அன்பில் மகேஷை நியமித்து திமுக பணிகளை தொடங்கிவிட்டது. அதேபோல் அம்பாசமுத்திரம் தொகுதி பணிகளை அனிதா ராதாகிருஷ்ணன் முன் நின்று தீவிரமாக செய்து வருகிறார். இதனால் 6 தொகுதிகளில் 3ல் வென்றால் கூட தவெக மிகப்பெரிய சேதாரத்தை சந்திக்கும் என்று திமுக கணக்கு போட்டுள்ளது.

    English Summary

    Udhayanithi Stalin: Udhayanidhi Stalin Plots to Dent CM's Image among public Using Upcoming By-Elections as a Major Weapon