இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து விலகும் உதயநிதி ஸ்டாலின்? திமுகவில் நடக்கும் மிகப்பெரிய மாற்றங்கள்

  • சென்னை: திமுகவின் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து உதயநிதி ஸ்டாலின் விலக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பொறுப்புக்கு பதிலாக உதயநிதி ஸ்டாலினுக்கு முதன்மை செயலாளர் அல்லது பொருளாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின், திமுகவின் அடிப்படை கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றம் செய்ய வேண்டிய குரல்கள் எழுந்தன. அதற்கு செவி சாய்த்த திமுக தலைவர் ஸ்டாலின், தொகுதி வாரியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள 38 குழுக்களை அமைத்தார். இந்த குழுவிடம் திமுக தொண்டர்கள் பலரும் பல்வேறு கோரிக்கைகளையும், புகார்களையும் அளித்தனர்.

    Advertisement

    இந்த புகார்கள், வேண்டுகோள்கள், கடிதங்கள் என்று அனைத்தையும் பெட்டி பெட்டியாக ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர். இதன்பின் லண்டன் புறப்படுவதற்கு முன் ஸ்டாலின் 11 பேர் கொண்டு மறுசீரமைப்பு குழுவை அமைத்தார். இந்த குழுவில் தங்கம் தென்னரசு, எழிலன் நாகநாதன், கனிமொழி, எஸ்கேபி கருணா உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

    இந்த குழு ஸ்டாலிடனிடம் மறுசீரமைப்பு செய்வதற்கான பரிந்துரையை வழங்க உள்ளது. அதன்படி திமுக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று திட்டத்திற்கு திமுக வந்துள்ளதாகவும், மாவட்டச் செயலாளர்களாக இளைஞர்களை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    Advertisement

    அதுமட்டுமல்லாமல் மண்டலப் பொறுப்பாளர்கள் என்ற பதவியை திமுக ஒழிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி இருவரும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டாலின் லண்டனில் இருந்து வந்த பின், இந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

    அதேபோல் உதயநிதி ஸ்டாலின் வகித்து வரும் இளைஞரணி செயலாளர் பதவியில் இருந்து விலக உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. அதற்கு பதிலாக கட்சியின் பொருளாளர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் ஏதேனும் ஒன்று அளிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இளைஞரணிக்கு இளைஞர் ஒருவரை கொண்டு வரவும் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    இதனால் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு பின் இளைஞரணி செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி தான் சீனியர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது. செப்டம்பர் மாதம் நடக்கும் முப்பெரும் விழாவுக்கு பின் திமுகவில் இந்த அதிரடி மாற்றங்கள் நடக்கவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    English Summary

    Udhayanithi Stalin: Udhayanidhi Stalin Rumoured to Resign as Youth Wing Secretary for Higher Party Post in DMK