விர்ச்சுவல் வாரியர்ஸ் அல்ல.. விர்ச்சுவல் அப்யூசர்ஸ்.. தவெகவை அட்டாக் செய்த உதயநிதி!

  • சென்னை: தவெகவின் சோசியல் மீடியா ஆதரவாளர்களை விர்ச்சுவல் வாரியஸ் என்று முதல்வர் விஜய் அடையாளப்படுத்திய சூழலில், அவர்களை விர்ச்சுவல் அப்யூசர்ஸ் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் செய்துள்ளார். அதேபோல் ஆட்சி அமைத்த நாளில் இருந்தே அதிமுக எம்எல்ஏ-க்களை முதல்வர் விஜய் Panic Buying செய்து வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரையுடன் இன்று தொடங்கியது. தவெக அரசு தயாரித்து கொடுத்த உரையில் ஒரு வார்த்தை கூட மாற்றாமல் ஆளுநர் அர்லேகர் அப்படியே வாசித்து சென்றார். ஆனால் சட்டசபை மரபுகளுக்கு மாறாக 2 முறை தேசிய கீதம் இடைக்கப்பட்டது சர்ச்சையாகியது.

    Advertisement

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இவர்களிடம் சொல்ல சாதனைகளே இல்லை. இவர்கள் சொல்வது, அறிவிப்பது எல்லாமே திராவிட மாடல் அரசின் கீழ் கொண்டு வரப்பட்ட திமுகவின் திட்டங்கள், சாதனைகள் தான். தவெக ஆட்சி காப்பி, பேஸ்ட் அரசாக இருக்கிறது.

    திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு ஆட்சியின் தோல்விக்கான பழியையும் திமுக மீது போட்டுள்ளார். ஆளுநர் உரை என்பது ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான கண்டெண்ட்டாக மட்டுமே அமைந்துள்ளது. அந்த அளவிற்கு தன்னை பற்றியும், தனது கட்சியை பற்றியும் சுயதம்பட்டம் அடித்து கொள்ளும் உரையாகவே ஆளுநர் உரை இருக்கிறது.

    Advertisement

    முதல்வர் கோட் சூட் அணிந்துள்ளார்.. வேட்டி சட்டை அணிந்துள்ளார்.. டிபன் பாக்ஸ் கொண்டு வந்தார் என்றுதான் தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் டிரெண்ட் செய்கின்றனர்.. அவர்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ் அல்ல.. விர்ச்சுவல் அப்யூசர்ஸ்.. முதல்வர் விஜய் உண்மையான பிரச்சனைகள் குறித்து என்றைக்கு வாய் திறப்பார் என்று தெரியவில்லை.

    பேரிடர் காலங்களில் உணவுப் பொருட்கள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களை வாங்குவது போல், ஆட்சி அமைந்த நாள் முதல் அதிமுக எம்எல்ஏ-க்களை முதல்வர் விஜய் Panic Buying செய்து வருகிறார். தேர்தல் பரப்புரையின் போது பெண்கள் பாதுகாப்பு குறித்து விஜய் வீர வசனம் பேசினார். ஆனால் இன்றைய சூழலை பார்க்கும் போது, கண்ணாடியை பார்த்து பேசிட்டு இருக்கீங்க சார் என்பதாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார்.

    English Summary

    Udhayanithi Stalin: 'Virtual Warriors' or 'Virtual Abusers'? Udhayanidhi Stalin Mocks CM Vijay's TVK Social Media Wing