இந்திய IT துறையை நெருங்கும் சூறாவளி.. பெரிய அடி விழப்போகுது! உஷார்!

  • சென்னை: பிரிட்டனில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது. அதாவது சிறிய நிறுவனங்கள் ஆள்சேர்ப்பை குறைத்துள்ளதால் வேலை வாய்ப்புகள் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளன. இது இந்திய ஐடி துறையை கடுமையாக பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    பிரிட்டனில் சிறிய நிறுவனங்கள் புதியதாக யாரையும் வேலைக்கு எடுக்க ரெடியாக இல்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், நிறுவனங்களை நடத்தவும் அதிக செலவாகிறது என்று கூறி வேலைக்கு ஆட்களை எடுப்பதை நிறுவனங்கள் நிறுத்தியிருக்கின்றன.

    Advertisement

    பிரிட்டனில் நிலைமை மோசம்

    பிரிட்டனின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டிருக்கும் டேட்டாவில் இது தெரிய வந்திருக்கிறது. தேசிய அளவில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை 7,070,00ஆக உள்ளது. தற்போது நிலவும் சூழலில் ஒவ்வொரு வேலை வாய்ப்புக்கும் சுார் 2.5-2.6 பேர் வரை போட்டியிடுகிறார்கள். இது பிரிட்டனின் வேலைவாய்ப்பு சந்தை மந்தமடைந்து வருவதை காட்டுகிறது. நிறுவனங்கள் புதியதாக முதலீடு செய்ய தயங்குகின்றன. நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய கூட அவர்கள் ரெடியாக இல்லை.

    சிக்கலில் இந்தியா

    இந்த பிரச்சனை வெறும் பிரிட்டனுடன் மட்டும் நிற்கப்போவதில்லை. இந்தியாவில் பெரிய பூகம்பமாக இது வெடிக்க இருக்கிறது. ஏனெனில் பிரிட்டனுக்கும், இந்தியாவுக்கும் இடையே வலுவான பொருளாதார மற்றும் ஐடி வணிக தொடர்பு இருக்கிறது. TCS, Infosys, Wipro, HCL போன்ற முன்னணி இந்திய ஐடி நிறுவனங்களின் மொத்த வருவாயில் 15-20% பிரிட்டனிலிருந்துதான் வருகிறது. பிரிட்டன் அடி வாங்குகிறது எனில்.. புதிய புராஜெகட்களை ஒத்தி வைக்கும்போது நிச்சயம் இந்திய ஐடி நிறுவனங்கள் வருவாயை இழக்கும்.

    Advertisement

    இந்திய ஐடி நிறுவனங்கள் புதிய பட்டதாரிகளை வேலைக்கு எடுப்பதையும், அனுபவமிக்க ஊழியர்களை வேலைக்கு எடுப்பதையும் குறைத்துக்கொள்ளும். ஐடி துறையை தாண்டி.. வங்கி, ஜவுளி மற்றும் ஏற்றுமதி துறை, ஆட்டோமொபைல் துறை ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்படும்.

    இந்தியாவின் நிலை

    பிரிட்டனின் மாற்றத்தால் இந்தியாவில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றாலும்.. அதற்கு முன்னதாகவே இந்தியா ஏற்கெனவே பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கிறது. ஜிடிபி உயர்வதாக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், யதார்த்தத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அடி மாட்டு சம்பளம்தான் கிடைக்கிறது. உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் காரணத்தால் அன்றாட செலவுகளையே சுருக்கிக்கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

    Advertisement

    பிரச்சனை என்ன?

    பைக்குகள் தொடங்கி அன்றாட பொருட்களின் விற்பனை கிராமங்களில் மந்தமாக இருக்கிறது. ஜிஸ்டி நடைமுறைகள், கடன் பெறுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக லட்சக்கணக்கான எம்எஸ்எம்இ எனப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் லாப நெருக்கடியை சந்தித்திருக்கின்றன. போதாத குறைக்கு எதிர்பாராத பருவமழை மாற்றம், வறட்சி காரணமாக வேளாண் துறையும் நெருக்கடியில் இருக்கிறது.

    Topics: #UK #job #jobs

    English Summary

    Job Vacancies Hit 5-Year Low: The number of job vacancies in Britain has dropped to its lowest level in five years; specifically, job opportunities have declined to a five-year low as small businesses have cut back on hiring. Analysts state that this will severely impact the Indian IT sector.