உக்ரைன் பெண்ணுக்கு மறுபிறவி! மெரினா அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டவரை மீட்ட Life guards

  • சென்னை: சென்னை மெரினாவில் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை அங்கிருந்த மீட்பு படையினர் மீட்டனர்.

    Advertisement

    உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் அனோஷ்கா (24). இவர் சுற்றுலா பயணியாக இந்தியா வந்துள்ளார். பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர் சென்னைக்கும் வந்தார். அவர் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார்.

    Advertisement

    இந்த நிலையில் மெரினா கடற்கரைக்கு நேற்று மாலை 4 மணிக்கு சென்றார். அங்கு கடலில் இறங்கி குளித்துள்ளார். அப்போது அவர் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

    இதை கண்ட மற்றவர்கள் உடனடியாக மெரினாவில் செயல்படும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு காவலர்கள் முத்து சரவணன், பவினேஷ், விக்னேஷ் ஆகியோர் கடலுக்குள் சென்று அந்த பெண்ணை மீட்டனர். இதையடுத்து அந்த பெண் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    பொதுவாக மெரினா கடற்கரை எப்போதும் ஆபத்தான கடற்கரையாகவே அறியப்படுகிறது. இது உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை. இந்த கடற்கரை சுமார் 13 கி.மீ. நீளம் கொண்டது.

    Advertisement

    இந்த கடற்கரை கடந்த 1880 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இதற்கு அப்போதைய மாகாண ஆளுநர் மெரினா கடற்கரை என பெயரிட்டார். இந்த மெரினா கடற்கரையில் கடல் அலைகளின் வேகம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். அதிலும் இங்கு ஏராளமான சுழல்கள் இருக்கின்றன. இதனால் அங்கு குளிப்பது ஆபத்தை கொடுக்கும் என எத்தனையோ விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், அதை யாரும் கேட்பதில்லை.