தமிழகம் முழுவதும் ஒரு மணி நேர மின்தடை.. அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி!

  • சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென ஒரு மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும், சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு நேரங்களில் ஏற்பட்ட இந்த திடீர் மின்தடை காரணமாக மக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டதோடு, பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

    Advertisement

    இந்த திடீர் மின்தடைக்கான உண்மையான காரணம் என்ன, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

    வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் அதிகப்படியான வெயில் காலம் குறைந்து பருவமழை சூழல் தொடங்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாகத் தொடர்ந்து நீடித்த வெயில் மற்றும் வெப்பம் காரணமாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சாரத்தின் பயன்பாடு திடீரென பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மின் தேவையின் அளவு மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

    மறுபுறம், மின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் காற்றாலைகளில் காற்றின் வேகம் திடீரெனக் குறைந்துவிட்டது. இதனால் எதிர்பார்த்த அளவுக்கு காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கவில்லை.

    Advertisement

    மின் உற்பத்தியில் ஏற்பட்ட இந்த திடீர் சரிவு மற்றும் எதிர்பாராத மின் தேவையின் உயர்வு காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மின் பாதைகளில் பளு அதிகரித்து, ஒரு மணி நேரம் வரை நீடிக்கும் தற்காலிக திடீர் மின்தடைகள் ஏற்பட்டுள்ளன.

    நள்ளிரவு நேரங்களில் மின்சாரம் திடீரென பவர் கட்

    குறிப்பாகச் சென்னை ராயபுரம், திருவள்ளூர், பட்டாபிராம், தாம்பரம் மற்றும் பல மாவட்டப் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். நள்ளிரவு நேரங்களில் மின்சாரம் திடீரென நிற்பதால் முதியவர்களும், குழந்தைகளும் தூங்க முடியாமல் வீதிக்கு வந்து போராடும் சூழல் உருவானது.

    Advertisement

    வழக்கமான மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் குறித்த தகவல்கள் மக்களுக்குச் சரியாகச் சென்றடையாததும் இந்தப் புகார்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

    இந்தப் பிரச்னை பூதாகரமானதை அடுத்து, மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக நிலைமையைக் கைக்குள் கொண்டுவந்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மின்வாரியம், வெளிமாநில மின் சந்தைகள் மற்றும் பொதுப் பொதுப் பவர் பூலில் இருந்து உடனடியாகக் கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

    இந்த உடனடி நடவடிக்கையால் மின்கட்டமைப்பு மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    தற்போது மின்வாரியத்தின் உயர் அதிகாரிகள் தலைமையிலான சிறப்புக் குழுவினர் மாநிலம் முழுவதிலும் உள்ள மின் விநியோகத்தைக் கத்தரி போலக் கண்காணித்து வருகின்றனர். எந்தப் பகுதியிலும் தேவையற்ற மின்தடை ஏற்படாமல் இருக்கக் கள அலுவலர்களுக்குத் தீவிர உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    மேலும், பொதுமக்கள் தங்களது பகுதியில் ஏற்படும் மின் தடையைப் புகார் செய்ய 24 மணி நேரமும் செயல்படும் 'மின்னகம்' உதவி எண்களைத் (94987 94987) தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கத் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசின் முதன்மைக் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

    English Summary

    Unannounced 1-Hour Power Cuts Hit Tamil Nadu: Why Are Residents Facing Sudden Outages and What is the Government Doing?