கிட்னி பாதிப்பு வரப்போகிறதா? முன்கூட்டியே சொல்லும் AI.. சென்னை ஐஐடி கண்டுபிடித்த 3 ஏஐ அதிசயம்

  • சென்னை: சிறுநீரக நோய் ஏற்பட்ட பிறகுதான் அதை நம்மால் கண்டுபிடிக்கவே முடியும்.. ஆனால் இந்த நிலை தான் இப்போது மாறப்போகிறது... நோய் தீவிரமாவதற்கு முன்பேயே, ஒருவருக்கு கிட்னி பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறிய உதவும் புதிய ஏஐ தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி மற்றும் சிஎம்சி எனப்படும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். எப்படி தெரியுமா?

    Advertisement

    சிறுநீரகம் என்பது நம்முடைய உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு... ரத்தத்தில் உள்ள கழிவுகளை பிரித்து வெளியேற்றுவது உட்பட ஏகப்பட்ட பணிகளை இந்த கிட்னி செய்கிறது.. முக்கியமாக, நீர் மற்றும் உப்பு சமநிலையை பேணுவது, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது போன்ற பணிகளையும் இந்த கிட்னிதான் செய்கிறது.

    Advertisement

    சிறுநீரகம் பாதிப்பு

    ஆனால், கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டாலும் ஆரம்ப கட்டத்தில் பலருக்கு எந்த அறிகுறியும் தெரிவதில்லை. இதனால் நோய் தீவிரமடைந்த பிறகே மருத்துவமனைக்கு சென்று டெஸ்ட் எடுக்கும் நிலை ஏற்படுகிறது.. சிலருக்கு பாதிப்பு முற்றி, டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும் சூழலும் ஏற்பட்டு விடுகிறது.

    அப்படியே டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்பட்டாலும், அதன் செலவை எத்தனையோ ஏழை மக்களால் தொடர்ந்து சமாளிக்க முடிவதில்லை... அதனால்தான் சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் முக்கியமானதாகிறது.

    சென்னை ஐஐடி மெட்ராஸ்

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சென்னை ஐஐடி மற்றும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து 3 விதமான ஏஐ தொழில்நுட்பங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.. இதில் முதலாவது தொழில்நுட்பம், ஒருவரிடமுள்ள மெடிக்கல் ரிப்போர்ட்களை வைத்து அவருக்கு எதிர்காலத்தில் நீண்டகால சிறுநீரக நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்பதை கணிக்க உதவும்.

    Advertisement

    இரண்டாவது தொழில்நுட்பம், சிடி ஸ்கேன் படங்களை, கம்ப்யூட்டரே பார்த்து ஆய்வு செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.. அதாவது சாதாரண சிறுநீரகமா, நீர்க்கட்டியா, கல்லா அல்லது கட்டியா என்றெல்லாம் இந்த கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் கண்டறிந்து வகைப்படுத்த உதவும்.

    மூன்றாவது தொழில்நுட்பம், சிறுநீரகத்தின் சிடி ஸ்கேன் படத்தை வைத்து அதன் 3டி வடிவத்தை உருவாக்கும். இதன்மூலம் சிறுநீரகத்திலுள்ள கட்டியின் அளவு எவ்வளவு, அது சிறுநீரகத்தை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது? என்பதை மருத்துவர்கள் துல்லியமாக மதிப்பிட முடியும்.

    3 ஏஐ தொழில்நுட்பம்

    அதாவது இதை இன்னும் எளிமையாக சொன்னால், டாக்டருக்கு, இந்த ஏஐ தொழில்நுட்பம், ஒரு அசிஸ்டெண்ட் போலவே செயல்படுமாம்.. நோயை முன்கூட்டியே கண்டறியவும், பரிசோதனை முடிவுகளை விரைவாகவும் ஒரே மாதிரியான முறையிலும் ஆய்வு செய்யவும் இது உதவும். இதனால் நோய் தீவிரமடைவதை தாமதப்படுதத முடியும்.. சிலசமயம், டயாலிசிஸ் அளவுக்கு போகாதபடி தவிர்க்கவும் வாய்ப்பு ஏற்படலாம்.

    Advertisement

    இப்படியொரு சூப்பரான ஆராய்ச்சியை செய்தது வேறு யாருமல்ல.. சென்னை ஐஐடி இயந்திர பொறியியல் துறை பேராசிரியர் ஜி.எல். சாமுவேல், ஆராய்ச்சி மாணவி ஜெனிபர் டிலைட்டா ஆகியோர், வேலூர் சிஎம்சி சிறுநீரகவியல் துறை பேராசிரியர் சந்தோஷ் வர்கீஸ் உள்ளிட்டோருடன் இணைந்து மேற்கொண்டுள்ளனர்..

    இந்த 3 பேரின் போட்டோக்களும் இணையத்திலும் வெளியாகி உள்ளது.. இந்த ஆராய்ச்சியையும், அதன் நுணுக்கத்தையும் பார்த்துவிட்டு, நெட்டிசன்கள், இநத் 3 பேருக்கும் அப்ளாஸை அள்ளி தெளித்து கொண்டிருக்கிறார்கள்.. சூப்பர்ல...!!

    English Summary

    Unbelievable Secret Revealed by IIT Madras.. 3 New AI Technologies Can Detect Kidney Damage Early