Diwali bonus: ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட்! தீபாவளி போனஸ் அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?

  • சென்னை: நாடு முழுவதும் வரும் நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 78 நாட்கள் ஊதியம் போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

    Advertisement

    தீபாவளி பண்டிகை, துர்கா பூஜைக்கு முன்பாக ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு போன்ஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கு ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் தொகை வழங்க மத்திய அமைசரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    Advertisement

    பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்படது. இதன்படி 78 நாட்கள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்வேயில் பணியாற்றும் 11.4 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த போனஸ், கெஜட் அந்தஸ்து அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

    ஊழியர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.17,951 கிடைக்கும். தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்கள், ஸ்டேஷன் மாஸ்டர்ஸ், சூப்பர்வைசர்ஸ், டெக்னிஷியன்ஸ், ஹெல்பர்ஸ், பாயிண்ட்ஸ்மேன், அமைச்சக ஊழியர்கள், குரூப் சி பிரிவு ஊழியர்கள் ஆகியோருக்கு இந்த போனஸ் பொருந்தும். 2025-26 ம் ஆண்டில் ரயில்வேயின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருந்தது.

    Advertisement
    ரயிலில் சத்தமாக ரீல்ஸ், பாட்டு கேட்காதீங்க! மீறினால் 6 மாதம் சிறை.. 5,000 அபராதம்! தெற்கு ரயில்வே

    இந்த நிதி ஆண்டில் ரயில்வே, 1,670 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டது. மேலும், 7.41 பில்லியன் பயணிகளை ஏற்றி சென்றது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வேயில் பணியாற்றும் 11,40,770 ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதன் மூலம் ரயில்வேக்கு ரூ. 2,009.61 கோடி செலவு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் 78 நாட்கள் ஊதியமே ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் ஆக வழங்கப்பட்டது.

    English Summary

    Diwali bonus: With the Diwali festival set to be celebrated with great enthusiasm across the country on November 5, a Diwali bonus has been announced for railway employees. Ashwini Vaishnaw stated that the Union Cabinet has approved the payment of a bonus equivalent to 78 days' wages.