இந்தியாவில் 7 செல்போன் செயலிகளுக்கு தடை.. மின்சார வாகனங்களின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு அதிரடி

  • டெல்லி: மின்சார வாகனங்களின் பேட்டரிகளை போன் மூலம் முடக்க பயன்படுத்தப்பட்ட 7 செல்போன் செயலிகளுக்கு தடை விதித்துள்ளதோடு, அதனை உடனடியாக ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐபோன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    தற்போது நம் நாட்டில் மின்சார வாகனங்கள், பேட்டரி கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலரும் இந்த வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வடமாநிலங்களில் அதிகமானவர்கள் மின்சார ரிக்‌ஷாக்களை பயன்படுத்தி வருகின்றனர். இதுதான் அவர்களின் அன்றாட தொழிலாகவே உள்ளது.

    Advertisement

    இந்நிலையில் தான் மின்சார வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது அதன் டிரைவர்களுக்கே தெரியாமல் பாதி வழியில் அந்த வாகனத்தை நிறுத்த சில செல்போன் செயலிகள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.

    குறிப்பாக மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் 18 வயது நிரம்பிய ஒருவர் இ-ரிக்‌ஷாக்களை தனது செல்போன் செயலி மூலம் முடக்கி பாதி வழியில் நிற்க வைப்பதும், அதன்பிறகு அதனை சரிசெய்வதாக கூறி டிரைவர்களிடம் பணம் வசூலித்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    விசாரணையில் அந்த இளைஞர் BAT-BMS என்ற செயலியை பயன்படுத்தி மோசடி செய்துள்ளது. இந்த செயலி என்பது ப்ளூடூத் வழியாக அந்த மின்சார வாகனங்களின் பேட்டரியுடன் ப்ளூடூத் மூலம் இது இணைக்கப்படும். இதனை BAT - BMS செயலியால் கட்டுப்படுத்த முடியும். ப்ளூடூத் வழியாக எளிதாக இந்த செயலியை கனெக்ட் செய்து ஒரு கிளிக்கில் இ - ரிக்‌ஷாவை நிறுத்த முடியும். நம் நாட்டில் பல இ- ரிக்‌ஷாக்களில் இந்த நடைமுறை தான் உள்ளது. இதனால் பல இ - ரிக்‌ஷா டிரைவர்கள் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டனர்.

    Advertisement

    இந்நிலையில் தான் மத்திய அரசு இன்று அதிரடியாக 7 செல்போன் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இத்தகைய மோசடிக்கும் துணைபோகும் செயலிகளை அடையாளம் கண்டு மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    அதன்படி BAT-BMS, Lossigy, Epoch-i-Ion, SMART BMS உள்பட மொத்தம் 7 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த செயலிகளை ஆண்ட்ராய்டு செல்போன்களின் ப்ளேஸ்டோரில் இருந்து நீக்க கூகுள் நிறுவனத்துக்கும், ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்க ஆப்பிள் நிறுவனத்துக்கும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

    English Summary

    The Union Government has banned seven mobile applications used to disable e-vehicle batteries via smartphones and has issued immediate, decisive orders to Android and Apple to enforce this.