சென்னை: மத்திய இணை அமைச்சராக இருந்த எல் முருகன் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ஒருவர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்றும், அது நயினார் நாகேந்திரனா அல்லது தமிழக பாஜககவை சேர்ந்த மூத்த பெண் நிர்வாகியா என்று அரசியல் வட்டாரத்தில் யூகங்கள் பரவி வருகிறது.
அதே நேரம் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நயினார் நாகேந்திரன் மாற்றப்பட்டால், மாநில தலைவர் பதவிக்கு நடிகர் சரத்குமார் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மத்திய இணை அமைச்சராக இருந்த எல் முருகன் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது எம்பி பதவியையும் ராஜினமா செய்த எல் முருகன், பாஜகவை வலுப்படுத்த போவதாகவும், தீவிர கட்சி பணிகளில் ஈடுபடுவதற்காக தனது பொறுப்பில் இருந்து விலகியதாகவும் கூறியிருந்தார். எனினும், தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற ஒரே நபரும் அமைச்சரவையில் இருந்து விலகியது விவாதப்பொருளானது. விரைவில் மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மணிப்பூர், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் என 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அமைச்சரவையில் இதை மனதில் வைத்து சிலருக்கு இடம் கொடுக்கப்படும் என்றும் பேச்சு எழுந்துள்ளது. இது ஒருபக்கம் இருக்க தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த அக்கட்சி தலைமை வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. எல் முருகன் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து ஒருவர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்ற யூகங்கள் அதிகரித்துள்ளன. தற்போது மாநில தலைவராக இருக்க கூடிய நயினார் நாகேந்திரனா அல்லது தமிழக பாஜககவை சேர்ந்த மூத்த பெண் நிர்வாகியா? யார் இடம் பெற போகிறார்கள் என்ற கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்படுகிறது. எல். முருகன் மீண்டும் பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்றும் ஒரு பேச்சும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், ஏற்கனவே மாநில தலைவர்களாக இருந்தவர்கள் மீண்டும் அந்த பதவியில் நியமிக்கப்படுவது பெரும்பாலும் பாஜகவில் நடப்பது இல்லை. எனவே, புதிய தலைவர்தான் நியமிக்கப்படுவார் என்று பாஜக நிர்வாகிகள் இடையே பேச்சு எழுந்தது. ஒருவேளை நயினார் நாகேந்திரன் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டால், மாநில தலைவர் பதவிக்கு நடிகர் சரத்குமார் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோர் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்றேறக்குறைய இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில் தற்போதே பாஜக தலைமை தேர்தலுக்கான பணிகளை சத்தமில்லாமல் ஆரம்பித்து இருப்பதை பாஜகவின் சமீபத்திய நகர்வுகள் காட்டுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.எல் முருகன் திடீர் ராஜினாமா
தமிழகத்தை சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி
சரத்குமாருக்கு வாய்ப்பு?