சென்னை புறநகர் ரயில் சேவை - மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இணைப்பு.. 15 ஆண்டுக்கு பின் வந்த குட்நியூஸ்

  • டெல்லி: 15 ஆண்டு காத்திருப்புக்கு பின் சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன், சென்னை எம்ஆர்டிஎஸ் ரயில் சேவைகளை (புறநகர் ரயில்சேவை) இணைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.

    Advertisement

    சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பொதுமக்கள் வேகமாக செல்வதற்கு வசதியாக மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் (Chennai MRTS or Chennai Mass Rapid Transit System) இயக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    இதில் மெட்ரோ ரயில் இயக்கம் தொடர்பான பணிகளை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் சென்னை புறநகர் ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே கட்டுப்படுத்தி வருகிறது.

    இதற்கிடையே தான் இந்த 2 ரயில் சேவைகளையும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனமே நிர்வகிக்க அனுமதி கோரி அதற்கான முன்மொழிவு கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி தமிழக அரசு சார்பில் மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இறுதியாக 15 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த முன்மொழிவுக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

    Advertisement

    இதன்மூலம் சென்னை எம்ஆர்டிஎஸ் ( சென்னை புறநகர் ரயில் சேவை) சொத்துகள், இயக்கம், பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் இனி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது. அதன்படி முதற்கட்டமாக 90 நாட்களுக்குள் சென்னை புறநகர் ரயில் சார்ந்த சொத்துகள், செயல்பாடு, உள்ளிட்டவற்றை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் வழங்கும். அதன்பிறகு ரயில் இயக்கம் பராமரிப் புணி தொடர்பான முக்கிய பணிகள் உள்பட பிற அனைத்து இன்னும் 2 ஆண்டுகளில் முழுமையாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் வந்து சேர உள்ளது.

    English Summary

    After a 15-year wait, the Union Ministry of Railways has today granted approval to integrate the Chennai MRTS rail service (suburban rail service) with the Chennai Metro Rail service.