விலைவாசி கூடப்போகிறது.. விக்ரமராஜா எச்சரிக்கை.. யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதித்தது காரணம்

  • சென்னை: யுபிஐ பணப் பரிவர்த்தனை கட்டணத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இந்த கட்டணம் வணிகர்களிடம் வசூலிக்கப்படுவதால் விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும் என்று கூறியுள்ள விக்கிரமராஜாம் மத்திய அரசு உடனான பேச்சுவார்த்தைக்கு நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்கரின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 15ஆம் தேதி முதல் யுபிஐ பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம் விதிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை இலவசமாக அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2 ஆயிரத்திற்கு மேல் உள்ள பணப் பரிமாற்றங்களுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதனால் சிறு, குறு வணிகர்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் நிச்சயம் பாதிப்புக்கு உள்ளாக்கும். 50 கோடிக்கும் அதிகமானோர் யுபிஐ பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 60% பேர் நடுத்தர வர்க்கத்தினரையே சாரும். வங்கிகளுக்கு மத்திய அரசு ரூ.1,500 கோடி ஊக்கத்தொகை என மானியமாக இதுவரை வழங்கி வந்திருக்கிறது.

    வணிகர்களின் நலனைக் காப்பதில் இந்த தொகை மத்திய அரசுக்கு ஒரு பெரும் சுமை அல்ல. ரூ.75 ஆயிரத்திற்கு மேல் உள்ள பண பரிவர்த்தனைகளுக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண விதிப்பு முழுக்க முழுக்க வணிகத்தின் மீதுதான் விதிக்கப்படுவதால், ஏற்கனவே பலமுனை வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்ளுக்கு மேலும், மேலும் சுமைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

    Advertisement

    விவசாயிகள் மற்றும் மீனவர்கள் என்று பல தரப்பினருக்கும் அரசின் சலுகைகள் கிடைத்து வரும் நிலையில், அரசின் வரி வருவாய்க்கு உறுதுணையாக இருக்கும் வணிகர்கள் வரியும் செலுத்தி மேலும் பல பரிமாணங்களில் வரி விதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. விலைவாசி உயர்வால் நுகர்வோர் ஏற்கனவே பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

    யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதித்திருப்பது மேலும் வணிகர்களுக்கும் நுகர்வோருக்கும் பெரும் சுமை. விலைவாஅசி உயர்வுக்கும் வழி வகுக்கும். மத்திய அரசு வணிகர்கள் மீது விதிக்கும் இந்த யுபிஐ பணப் பரிவர்த்தை கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதன்பின் விக்கிரமராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், யுபிஐ கட்டணங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதால் விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும். மத்திய நிதியமைச்சரவை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் நாடு முழுவதும் வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    UPI: UPI Charges Will Fuel Inflation, Vikramaraja Urges Centre to Withdraw Transaction Fee