அரசு பணிகளில் வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிப்பு.. வரும் குரூப் 4 தேர்வுக்கு பொருந்துமா?

  • சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டி தேர்வுகளில் விண்ணப்பிப்பதற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று தேர்வர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் தமிழக அரசு இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில், நேரடி நியமனத்துக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 2 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் தேர்வுகள் நடத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அரசு பணிக்காக காத்திருக்கும் பல லட்சகக்ணக்கான தேர்வர்களுக்கு கலங்கரை விளக்கம் போல டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வுகளே உள்ளன.

    Advertisement

    டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டி தேர்வுகளில் விண்ணப்பிப்பதற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்று தேர்வர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து இருந்தனர். தேர்வர்களின் இந்த கோரிக்கையை ஏற்ற விஜய் அரசு, அதிரடியாக நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் விஜய் நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    RRB Group D: ரயில்வேயில் 30 ஆயிரம் காலியிடங்கள்! தீபாவளிக்கு முன்பாக தேர்வர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி

    அதன்படி, "நேரடி நியமனத்துக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பு உயர்வு, இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதாவது பி.சி., பி.சி. (எம்), எம்.பி.சி. மற்றும் டி.என்.சி., எஸ்.சி., எஸ்.சி. (அருந்ததியர்), எஸ்.டி., ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு ஏற்கனவே உள்ள வயது சலுகைகளோடு கூடுதலாக அமையும்.

    Advertisement

    இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (நேற்று) முதல் 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும். தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவு மூலம் வயது வரம்பு முடிவடையும் நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான போட்டித்தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பயன் அடைவார்கள்" என்று தெரிவித்து இருந்தார்.

    இதன்படி, குரூப் 1 தேர்வில் தற்போது அதிகபட்ச வயது வரம்பாக பொதுப்பிரிவினருக்கு 32 ஆக உள்ளது. தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 37 ஆக இனி இருக்கும். அதேபோல, இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 42 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும் இட ஒதுக்கிட்டு பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    Advertisement
    Group 2: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட் வெளியானது.. டவுன்லோடு செய்வது எப்படி?

    குரூப் 4 தேர்வை பொறுத்தவரை உயர் கல்வித்தகுதி பெற்று இருந்தால் பொதுப்பிரிவினருக்கு 30 ல் இருந்து 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிற இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வரம்பு கிடையாது. உயர் கல்வி தகுதி பெறாவிட்டால் 37 வயது உச்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    போட்டி தேர்வர்களுக்கு தயாராகி வரும் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தமிழக அரசின் இந்த உத்தரவு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதேநேரத்தில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட குரூப் 4 பணிகளுக்கு இந்த வயது வரம்பு பொருந்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 6 ஆம் தேதி வெளியானது.

    Advertisement

    விண்ணப்பிக்க வரும் 5 ஆம் தேதி கடைசி நாளாகும். தமிழக அரசின் அறிவிப்புக்கு முன்பே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 க்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதனால் பழைய முறையே, அறிவிப்பாணையில் உள்ளது. தற்போது தமிழக அரசு வயது வரம்பை கூட்டியிருப்பது இந்த பணியிடங்களுக்கு பொருந்துமா? என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கினால் மட்டுமே இதற்கு விடை கிடைக்கும்.

    நடப்பு தேர்விலே வயது வரம்பை உயர்த்தினால் பல லட்சக்கணக்கானவர்கள் பயன்பெறுவார்கள் என்பது தேர்வர்களின் எண்ணமாக உள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சியும் விரைவில் உரிய விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Upper Age Limit: Following long-standing demands from aspirants to raise the upper age limit for competitive examinations conducted by the TNPSC (Tamil Nadu Public Service Commission), the Tamil Nadu government has issued an official announcement. Under this, the upper age limit for candidates applying for direct recruitment has been increased by 5 years.