150 சவரன் நகைகளுடன் வடபழனியில் காதலனுடன் ஓடிய மனைவி.. சென்னை கோர்ட்டுக்கே போன கணவன்.. இப்ப பாருங்க

  • சென்னை: 150 சவரன் வீட்டிலிருந்த நகைகள் திடீரென காணாமல் போயிருக்கிறது.. கூடவே மனைவியையும் குழந்தையையும் காணவில்லை... என்ன நடந்தது என்று தெரியாமல் கணவர் பல இடங்களில் தேடியிருக்கிறார். போலீசில் புகார் கொடுத்தும் உடனடியாக நடவடிக்கை இல்லாததால், கடைசியில் கோர்ட் கதவைத் தட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.. அதன்பிறகுதான், இந்த வழக்கில் ஒவ்வொரு தகவலாக வெளியே வரத் தொடங்கியிருக்கிறது.

    Advertisement

    சென்னை வடபழனியை சேர்ந்தவர் ஆதித்தன்... இவருக்கும் இலக்கியாவுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. 2 பேருக்கும் ஒரு மகன் உள்ளார்.

    Advertisement

    சென்னை வடபழனி தம்பதி

    ஆரம்பத்தில் குடும்ப வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில், சில வருடங்களாக 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடும் குடும்பத் தகராறும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில்தான் வீட்டில் இருந்த 150 சவரன் நகைகளையும் எடுத்துக்கொண்டு, குழந்தையுடன் இலக்கியா திடீரென வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. மனைவியையும் குழந்தையையும் காணாமல் பதறிப்போன ஆதித்தன், பல இடங்களில் தேடியிருக்கிறார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    ஆதித்தன் தந்த புகர்

    வீட்டிலுள்ள நகைகளை எடுத்து கொண்டு, குழந்தையையும் அழைத்து சென்ற மனைவியை கண்டுபிடித்து தரும்படி வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.. ஆனால், இதுதொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது... காரணம், தன் மீதான நடவடிக்கைகளை திசைதிருப்பும் வகையிலும் கணவர் ஆதித்தன் மீது ஏராளமான பொய் புகார்களை இலக்கிய அளித்தாராம்.. இதன்காரணமாக காவல்துறையின் விசாரணை தற்காலிகமாக தேக்கமடைந்தது..

    Advertisement

    ஆனால் அப்போதும் ஆதித்தன் விடவில்லை.. இந்த விவகாரத்தில் நியாயம் வேண்டி நீதிமன்றத்தை நாடினார்.. நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் கடுமையான அறிவுறுத்தலின் பெயரில், போலீசார் உடனடியாகத் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்..

    150 சவரன் நகைகள்

    அப்போதுதான் ஜிஷ்னுவிற்கும் இலக்கியாவிற்கும் இடையில் 6 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக ஜிஷ்னுவின் அண்ணனுக்கு இலக்கியா பக்கம் பக்கமாக இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பியிருக்கிறாராம்.. அதில், ஜிஷ்னுவுடன் பல இடங்களில் ஊர் சுற்றியதாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததாகவும், இதனால் கர்ப்பமடைந்து 6 மாதங்களில் கலைத்ததாகவும் மெசேஜில் குறிப்பிட்டுள்ளாராம் இலக்கியா.

    Advertisement

    இதற்கு பிறகு, நவீன தொழில்நுட்ப உதவியுடன் கேரளாவில் பதுங்கியிருந்த இலக்கியாவின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்த வடபழனி காவல் நிலைய தனிப்படை போலீசார், இலக்கியாவை அதிரடியாகக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

    இலக்கியாவிடம் தொடர் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.. அவர் திருடிச் சென்ற நகைகளை மீட்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்... நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இலக்கியாவைச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளின் கீழ் ஜெயிலில் அடைக்கவும் உரிய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன... 6 வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவம், இப்போது சென்னையில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    English Summary

    Vadapalani Woman Runs Away With Lover & 150 Sovereign Gold.. Chennai Husband Goes To Court, What Happened Next?