சொன்ன சொல் தவற மாட்டான் இந்த வைகோ! எப்போதும் ஒரே மாதிரி தான் பேசுவேன்! பிரஸ் மீட்டில் சீற்றம்!

  • சென்னை: எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்தே கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் அதிகரித்துள்ளது. தற்போதும் அதுதான் நடக்கிறது. அதை தான் எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகிறார்கள் எனவும், தான் எப்போதும் ஒரே மாதிரி தான் இருப்பேன் எனவும் பேசியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

    Advertisement

    திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்," நாடு முழுவதும் 'SIR' மூலமாக 13 கோடியே 30 லட்சம் மக்களின் அடிப்படை வாக்குரிமை பறிக்கப்பட்டுவிட்டது.

    Advertisement

    தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் திமுகவினர் முழுமையாக ஈடுபட்டனர். அதனால்தான், அவர்கள் தொடக்கத்தில் 'SIR' முறைக்கு எதிராக மௌனம் காத்துவிட்டு, தற்போது நாடு முழுவதும் அதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, திமுகவும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

    வைகோ

    தமிழகத்தில் வாக்காளர்கள் பட்டியல் நீக்கப்பட்டதற்கு திமுகதான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், 4,000 கோடி ரூபாய் மழைநீர் வடிகால் திட்ட முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு கூட்டணி தர்மத்தைப் பாதுகாப்பதற்காக நான் பொதுவெளியில் குரல் கொடுக்காமல் இருந்தேன். அதே நேரத்தில், உள்ளுக்குள் என் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டு தான் வந்தேன்.

    Advertisement
    SIR: எஸ்ஐஆர் இல்லாட்டி தவெக 108-க்கு பதில் 200 தொகுதிகளில் வென்றிருக்கும்! துரை வைகோ

    த.வெ.க ஆட்சி

    அதேபோல் தான் தற்போது த.வெ.க ஆட்சியில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு பொதுவெளியில் குரல் கொடுப்பது இல்லையா? வைகோ எப்போதும் ஒரே போல் தான் இருப்பான். தற்போதைய தவெக ஆட்சியில் பொதுப்பணி துறை, பத்திரப்பதிவுத் துறை உள்ளிட்ட எதிலும் கமிஷன் கிடையாது. ஊழல் குறைந்துள்ளது. ஊழலை முற்றிலும் ஒழிப்பது என்பது இமயமலையை நகர்த்துவது போன்றது. அதனை இந்த அரசு கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து வருகிறது.

    எஸ்ஐஆர் பணி

    கடந்த ஆட்சிக்காலத்தில் கமிஷன் வாங்கிப் பழகிய அதிகாரிகள், தற்போது தவெக ஆட்சியில் கமிஷன் வாங்க முடியாததால், தவெக அரசைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக வாக்காளர்களை நீக்கி உள்ளதாக குற்றம் சாட்டும் நீங்கள் தமிழகத்தில் வாக்காளர்கள் இணைக்கப்பட்டதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும். திமுகவினர் தான் எஸ்ஐஆர் பணியின் போது முழுமையாக ஈடுபட்டார்கள். அவர்கள் விருப்பப்படி தான் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள்.

    Advertisement
    இடைத்தேர்தல் ரிசல்ட்.. தவெகவை உச்சிமுகர்ந்து வாழ்த்திய வைகோ, துரை வைகோ!

    திமுக தான் பொறுப்பு

    இதற்கெல்லாம் திமுக பொறுப்பேற்க வேண்டும். ஞானேஷ்குமாரால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு, ஒரு ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது. எம்.ஜி.ஆர் ஆட்சி காலம் தொடங்கி ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, திமுக என எல்லோருடைய ஆட்சிக்காலத்திலும் கொலைகள் அதிகரித்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போதும் நடக்கிறது. இருப்பினும், காவல்துறை முன்பு போலவே குற்றங்களை தடுக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    எதிர்க்கட்சிகள்

    படுகொலைகளை யாரும் தடுக்க முடியாது. எல்லா காலத்திலும் நடப்பது தான் தற்போதும் நடக்கிறது ஆனால் அதை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி கூறி வருகிறார்கள். அது எதிர்க்கட்சிகளின் உரிமை. அதை அவர்கள் செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் த.வெ.க ஆட்சியின் மீது புழுதி வாரி இரைப்பதும் மிகைப்படுத்தி குற்றச்சாட்டு கூறுவதும் நடந்து வருகிறது. திமுக ஆட்சியில் நடந்த லாக்கப் மரணங்கள் குறித்து திமுக வாய் திறந்தது கிடையாது.

    Advertisement

    விலைவாசி உயர்வு

    குற்றங்கள் செய்பவர்கள் எல்லா கட்சியிலும் இருப்பார்கள். அவ்வாறு செய்பவர்களின் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் அந்த வகையில் த.வெ.கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. விலைவாசி உயர்வு என்பது சர்வதேச பிரச்சனை எல்லா ஆட்சிகாலத்திலும் விலைவாசி உயர்வு இருந்துள்ளது விலைவாசி உயர்வை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது. அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்கிற எந்த எண்ணமும் மதிமுகவிற்கு கிடையாது." என்றார்.

    English Summary

    MDMK chief Vaiko comments on voter deletions, corruption and murder cases, saying he has always maintained the same political position.