திமுக வேலைக்காகாது.. மகனுக்காக வைகோ எடுத்த முடிவு! தவெகவில் துண்டு போடும் துரை! மதிமுக யூடர்ன்?

  • சென்னை: தமிழக அரசியலில் ஒருகாலத்தில் தனி அடையாளத்துடன் வலுவாக இருந்த கட்சிகளில் முக்கியமானது மதிமுக. அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, பல ஆண்டுகளாக கூட்டணி அரசியலில் முக்கியமான முகமாக இருந்து வந்தார். ஆனால் தற்போது அவரது அரசியல் நகர்வுகள் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளன. சமீபமாக விஜய்யை அவர் வெகுவாக பாராட்டி வரும் நிலையில், தவெகவுடன் மதிமுக அடுத்த மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற யூகம் அரசியல் வட்டாரங்களில் அதிகமாகப் பேசப்படுகிறது.

    Advertisement

    சமீபத்தில் நடண்ட்க சில சம்பவங்களும் அதற்கான சிக்னலை வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகின்றன. தேர்தலுக்கு முன்பே மதிமுகவின் சில நிர்வாகிகள், திமுக கூட்டணியை விட தவெக கூட்டணிக்குச் சென்றிருக்கலாம் என்ற கருத்தை பேசியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    காரணம், விஜயின் வருகையால் இளைஞர்களிடம் புதிய அரசியல் ஈர்ப்பு உருவாகியுள்ளது என்பதே. இந்தத் தேர்தலில் மதிமுகவுக்கு திமுக மிகவும் குறைந்த இடங்களையே ஒதுக்கியது. ஆரம்பத்தில் இரண்டு தொகுதிகள் மட்டுமே வழங்க திட்டமிட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் நான்கு தொகுதிகள் கிடைத்தன.

    மதிமுக

    ஆனால் அதிலும் மதிமுக தனிச் சின்னத்தில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், வெற்றி பெற்றாலும் முழுமையான சுதந்திரம் கிடைக்காது என்ற மனநிலை கட்சிக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய் வைகோவின் வீட்டிற்கு சென்ற சம்பவமும் அரசியல் கவனத்தை ஈர்த்தது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் பலரும் விஜய்க்கே வாக்களித்தார்கள் என்று துரை வைகோ சிரித்தபடி கூறினார்.

    Advertisement

    வைகோ

    அந்த ஒரு சம்பவமே மதிமுகவின் அடுத்த முடிவு என்னவாக இருக்கப் போகிறது என்ற கேள்வியை எழுப்பியது. அதற்குப் பிறகு சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பின்போதும் மதிமுக உறுப்பினர்கள் பங்கேற்காதது பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டாலும், அரசியல் ரீதியாக அது வேறு அர்த்தத்தில் பார்க்கப்பட்டது.

    திமுக கூட்டணி

    குறிப்பாக திமுக கூட்டணியில் இருந்தும் முக்கியமான நேரத்தில் வாக்கெடுப்பில் பங்கேற்காதது, மறைமுக அதிருப்தியின் வெளிப்பாடாகவே பேசப்பட்டது. மதிமுக அரசியல் வரலாற்றைப் பார்த்தால், வைகோ எப்போதும் நீண்டகால அரசியல் கணக்கோடு முடிவெடுப்பவர் என்று கூறப்படுகிறது. வெற்றி பெறுவது மட்டுமல்ல, எதிரணி வளரக்கூடாது என்பதிலும் அவர் கவனம் செலுத்துவார் என்ற கருத்து அரசியல் விமர்சகர்களிடையே உள்ளது.

    Advertisement

    இளைஞர்களின் ஆதரவு

    கடந்த காலங்களில் பல கூட்டணிகளை மாற்றிய அனுபவமும் வைகோவுக்கு இருக்கிறது. அதிமுக, திமுக, தேசிய ஜனநாயக கூட்டணி, மூன்றாவது அணி என பல்வேறு அரசியல் பாதைகளில் பயணித்துள்ளார். அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் இப்போதும் புதிய அரசியல் சூழ்நிலையை அவர் கணக்கிட்டு வருகிறார் என கூறப்படுகிறது. முக்கியமாக, இளைஞர்களின் ஆதரவு வேகமாக விஜய் பக்கம் நகர்கிறது என்ற எண்ணம் மதிமுகவுக்குள் வலுப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

    துரை வைகோ

    திமுகவுக்கு எதிரான மனநிலை உருவாகும் சூழலில், எதிர்காலத்தில் தவெக முக்கிய சக்தியாக மாறலாம் என்ற அரசியல் கணக்கும் இருக்கிறது. அதேநேரத்தில், நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே வைகோ தனது அடுத்த நகர்வை திட்டமிடுகிறார் என்றும் கூறப்படுகிறது. மகன் துரை வைகோவை தொடர்ந்து அரசியலில் வலுப்படுத்த வேண்டும் என்பதுடன், மேலும் சிலருக்கு நாடாளுமன்ற வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்ற அரசியல் திட்டமும் இருப்பதாக பேசப்படுகிறது.

    Advertisement

    தமிழக அரசியல்

    திமுக கூட்டணியில் தொடர்ந்தால் அந்த வாய்ப்புகள் குறையலாம். ஆனால் தவெக கூட்டணியில் சென்றால் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மதிமுக வட்டாரத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
    இதனால், தற்போதைய அமைதியாக இருந்தாலும் கூட மதிமுகவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. வைகோ எடுக்கும் அடுத்த முடிவு, தமிழக அரசியலில் புதிய கூட்டணியை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

    English Summary

    Vaiko and MDMK’s latest moves fuel speculation about a future alliance with Vijay’s TVK.