திருமாவளவன் பேச்சுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்” - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிண்டல்!

  • சென்னை: "திருமாவளவன் பேச்சுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்" என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிண்டல் செய்துள்ளார். தவெக அமைச்சரவையில் இருந்தாலும் திமுகவுடன் நட்பு தொடர்வதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துக்கு வைகோ பதில் கொடுத்துள்ளார்.

    Advertisement

    விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், இன்​னும் திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கிறீர்​களா? என என்​னிடம் கேட்​டால், ஆம்​.. திமுக கூட்​ட​ணி​யில் இருப்​ப​தாகவே உணர்​கிறோம். இதுவே என் பதில். தற்​போது​வரை தவெக கூட்​ட​ணி​யில் விசிக இணைய அதி​காரப்​பூர்​வ​மாக எந்த நிகழ்​வும் நடை​பெற​வில்​லை.

    Advertisement

    விசிக அமைச்​சர​வை​யில் இடம் பெற்​றதும் திமுக​வுக்கு துரோகம் செய்து விட்​டோம் என விமர்​சிக்​கின்​றனர். பதவி என்​றவுடன் ஒரு கூட்​ட​ணியை உதறி​விட்டு நாங்​கள் ஓடி​விட​வில்​லை, எடுக்​கின்ற முடிவு​கள் ஒவ்​வொன்​றை​யும் கூட்​டணி தலை​மை​யான மு.க.ஸ்​டா​லினிடம் பகிர்ந்​து​ கொண்​டோம். அந்த உறவு இன்​னும் தொடர்​கிறது எனக் கூறியிருந்தார்.

    இந்நிலையில் கோவில்பட்டியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ, முந்தைய ஆட்சியாளர்களால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அதை சமாளிக்க முடியாமல் முதலமைச்சர் திணறிக் கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார்.

    மேலும், தவெக அமைச்சரவையில் தொடர்ந்தலும், திமுகவுடன் நட்பு தொடரும் என திருமாவளவன் கூறியது நோபல் பரிசு கொடுக்கவேண்டிய கருத்து என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கிண்டல் அடித்துள்ளார்.

    English Summary

    MDMK General Secretary Vaiko has quipped that Thirumavalavan’s speech deserves a Nobel Prize. He made this remark in response to VCK leader Thirumavalavan’s statement that, despite being part of the TVK cabinet, he maintains a friendly relationship with the DMK.