சென்னை: தமிழக சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து தனித் தீர்மானம் கொண்டு வந்த முதல்வர் விஜய்க்கும், அதை ஆதரித்த அனைத்து கட்சியினருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தேசிய கீதத்தின் அளவுக்குத் பள்ளியிலிருந்தே அது மாண்புமிகு உறுப்பினர்கள் சிலர் தமிழ்த்தாயே! உன்னைச் இவ்வாறு அவர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது தமிழ்த் தாய் வாழ்த்து அனைத்து நிகழ்விலும் முதலில் கட்டாயம் பாட வேண்டும் என்ற தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்
தனித் தீர்மானம் இயற்றிய
தமிழ்நாட்டரசையும்
ஒருதுளி மறுப்புமின்றி
ஒருமனதாக
நிறைவேற்றிக் கொடுத்த
அனைத்துக் கட்சித்
தலைவர்களையும்
பரந்துபட்ட தமிழ் உலகம்
பாராட்டுகிறது;
எழுந்துநின்று நன்றி சொல்கிறது
வெறும் சொற்கூட்டமல்ல;
அது
புவியியல், வரலாறு,
பீடு, பெருமிதம்
அனைத்தும் கொண்ட
இனத்தின் குறியீடாகும்
தமிழ்த்தாய் வாழ்த்தைத்
தமிழர்கள் அனைவரும்
மனப்பாடம் செய்யவில்லை
மனப்பாடப் பொருளாக
மாற்றப்பட வேண்டும்
முன்மொழிந்ததைப் போலவே
அது சட்டமாகவும்
இயற்றப்பட வேண்டும்
செயல் மறந்து மட்டுமல்ல
செயல் புரிந்தும் வாழ்த்துவோம்