சென்னை: தனது கவிதைகளால் தேசபக்திக் கனலைக் கொழுந்துவிட்டு எரியச் செய்த மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று. பாரதி நினைவு நாளில் அவரைப் பற்றி கவிதை எழுதி வெளியிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
தாய்மொழியாம் தமிழ் மீது அளவு கடந்த அன்புகொண்டவர் பாரதி. பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான பாரதி, "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" என்று பாடியுள்ளார். தம் எழுத்துகளின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர் பாரதி.
சுதந்திரப் போராட்ட நடவடிக்கையால் ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தனது 39 ஆம் வயதில் 1921 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் மறைந்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11 ஆம் தேதி பாரதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், பாரதியாரின் நினைவுநாளான இன்று கவிஞர் வைரமுத்து, தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது பின்வருமாறு: திருவல்லிக்கேணி மயானத்தில் ஒரு பென்சில்போல் அண்டத்தின் விண்ணைத் துழாவிக் சூரியனை இந்தியத்தை செந்தமிழ் பேசிப் பேசிச் உடல் இளைத்தாலும் தின்று முடித்தது ஏ தீயே! அவன் கட்டை எரித்தாய்; இறப்பிலே முடிகிறான்
எரியுண்டான் பாரதி
இந்நாளில்
கிடந்த உடலை
எரிக்கப் பார்த்து
ஏமாந்தது நெருப்பு
மறுபக்கம் பார்த்த கண்களை
காற்றைச் சாடிய கைகளை
முடித்து வைத்திருந்த மூளையை
ஏந்திவந்த இதயத்தை
சிவந்த நாவினை
உருவிளைக்காத மீசையைத்
தீரா நெருப்பு
மாமிசம் எரித்தாய்;
மனசை எரிப்பாயோ?
கவிதை எரிப்பாயோ?
மனிதன்
நெருப்பிலே ஜனிக்கிறான்
கவிஞன்!