வலம்புரி ஜான் உடைத்த நிஜம்! ஜானகி, ஜெயலலிதா பாணியில் சங்கீதா, திரிஷா? விஜய்யின் அந்த சல்யூட் யாருக்கு

  • சென்னை: தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் பங்கேற்ற சுதந்திர தின விழாவில், அவரது மனைவி சங்கீதா மற்றும் பிள்ளைகள் பங்கேற்காத நிலையில், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோருடன் நடிகை திரிஷா கலந்துகொண்டது மிகப்பெரிய அரசியல் மற்றும் சமூக விவாதங்களை உருவாக்கியுள்ளது. இந்த சூழலை முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்வோடு ஒப்பீடு செய்து பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ள கருத்துக்கள் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

    Advertisement

    News Time TN என்ற சேனலில் இதுகுறித்து பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ், "எம்.ஜி.ஆரின் காலத்தில் அவரது மனைவி ஜானகி ராமச்சந்திரன் ஒருபுறமும், அவருடன் அரசியல் மற்றும் சினிமா துறையில் மிக நெருங்கிய தோழியாக இருந்த ஜெயலலிதா இன்னொருபுறமும் இருந்தனர்.

    Advertisement

    வலம்புரி ஜான்

    எம்ஜிஆர் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும், பொதுவாழ்வில் தனக்கு நெருக்கமான தோழியையும் கையாண்ட அதே பாணியைத்தான் இப்போதைய சூழலில் விஜய்யும் பின்பற்றுகிறார்.

    பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான வலம்புரி ஜான் அன்று "தாய்" வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது அவர் எம்.ஜி.ஆரையும் அவரது மனைவி ஜானகியையும் இணைத்து ஒரு போட்டோவுடன் "தாய்" இதழின் கவர் ஸ்டோரியாக வெளியிட்டார்.

    எம்ஜிஆரிடம் கோபப்பட்ட ஜெயலலிதா

    இந்த அட்டைப்படம் வெளியானதுமே, ஜெயலலிதா மிகுந்த கோபமும் கொந்தளிப்பும் அடைந்தார். உடனே அவர் பத்திரிகையாளர் வலம்புரிஜானை தொலைபேசியில் தொடர்புகொண்டு மிகவும் காட்டமாகவும் கடுமையான வார்த்தைகளாலும் திட்டத் தொடங்கினார். அத்துடன் நிற்காமல், எம்ஜிஆரிடமும் சென்று புகார் அளித்தார். ஜானகியுடன் இணைத்து போட்டோ போட்டு, உங்களுக்கும் எனக்கும் இடையே இருக்கும் நெருக்கமான பந்தத்தைப் பிரிக்க பார்க்கிறார்கள் , என்னுடைய இமேஜை கெடுக்க முயல்கிறார்கள் என்றெல்லாம் ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் முறையிட்டார்.

    Advertisement

    டிட்டோ எம்ஜிஆர் பாணி

    ஆக, மனைவி ஜானகி ஒருபுறம் இருந்தாலும், தனக்கு நெருங்கிய தோழியாக இருந்த ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னுடைய அரசியல் மற்றும் பொதுவாழ்வில் எம்.ஜி.ஆர் எப்படி தக்கவைத்துக்கொண்டாரோ, அதேபோலவே விஜய்யும் இப்போது நடந்து கொள்கிறார். சட்டப்பூர்வ மனைவியான சங்கீதா ஒருபுறம் இருக்கும் சூழலில், பொது நிகழ்வுகளிலும் முக்கியமான அரங்கங்களிலும் திரிஷாவையே விஜய் தன்னுடன் அழைத்து வருகிறார்.

    சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படும் நிலையிலும், விஜய்யின் குடும்பத்திற்கு ஒதுக்கப்படும் இடத்தில் மனைவியையும் பிள்ளைகளையும் விடுத்து திரிஷாவை உட்கார வைப்பதும், கொடி ஏற்றிய பிறகு சல்யூட் அடிப்பதும் எம்.ஜி.ஆர் காலத்து வலம்புரிஜான் குறிப்பிட்ட அதே வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

    Advertisement

    விஜய் தெளிவுபடுத்துவாரா

    எஸ்ஏ சந்திரசேகருக்கும் திரிஷாவிற்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில், குடும்பம் என்ற தோற்றத்தை உருவாக்கவே திரிஷா அழைத்து வரப்பட்டதாகவும் கருதப்படுகிறது... லண்டனைச் சேர்ந்த மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்த மனைவியையும் பிள்ளைகளையும் புறக்கணித்துவிட்டு திரிஷாவை முன்னிலைப்படுத்துவது ஏன் என்ற கேள்விகளும் எழுகின்றன.

    திரிஷாவின் வருகை மற்றும் அவரது ஆடை வடிவமைப்பு பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், குடும்பத்தை தவிர்த்துவிட்டு திரிஷாவை அரசு விழாக்களில் முன்னிலைப்படுத்துவது ஏன், இருவருக்குமான உறவு என்ன என்பது குறித்தெல்லாம் விஜய் தெளிவுபடுத்த வேண்டும்" என்றெல்லாம் தாமோதரன் பிரகாஷ் தனது உரையில் விவரித்துள்ளார்.

    English Summary

    Valampuri john Reveals the Truth.. Sangeetha-Trisha Like Janaki-Jayalalithaa? Vijay’s Salute