சென்னை: சென்னை வானகரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட 17 வயது இளஞ்சிறார், போலீசாரின் பிடியிலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழிப்பறி வழக்கில் மற்றொரு நபருடன் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, வாகனத்தில் இருந்து இறங்கிய அவர் திடீரென தப்பி ஓடியுள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே சிறைகளில் இருந்தும் போலீசாரிடம் இருந்தும் கைதிகள் தப்பியோடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை வைத்து மாநிலத்தின் சட்ட ஒழுங்கு தொடர்பாகவும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கிடையே மீண்டும் அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
வானகரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கூறப்படும் விக்னேஷ் மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இதையடுத்து இருவரையும் இன்று மாலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது காவல் வாகனத்தில் இருந்து முதலில் இறங்கிய விக்னேஷை போலீசார் காவல் நிலையத்திற்குள் அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து வாகனத்தில் இருந்து இறங்கிய 17 வயது இளஞ்சிறார், அந்த நேரத்தில் போலீசாரின் பிடியிலிருந்து திடீரென தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக சிறுவனை பிடிக்க முயன்றனர். இருப்பினும், அதற்குள் சிறுவன் எஸ்கேப் ஆகிவிட்டான். இதையடுத்து அவரை தேடும் பணிகளில் போலீசார் இறங்கியுள்ளனர். தப்பியோடிய இளஞ்சிறார் எந்த பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வானகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தமிழகத்தில் சமீப காலமாக கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருவது பேசுபொருளாகியுள்ளது. கடந்த அக்டோபர் 26ஆம் தேதி தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் இருந்து 17 விசாரணை கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடினர். கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி காவலர்களை உள்ளே வரவழைத்து, அவர்களை தாக்கி பிரதான வாசலின் சாவியை பறித்துக்கொண்டு கைதிகள் தப்பினர். பின்னர் தேடுதல் வேட்டையில் தப்பியோடிய 17 பேரும் மீண்டும் கைது செய்யப்பட்டனர். கடந்த அக்டோபர் 31ஆம் தேதி கோவை மத்திய சிறையின் பிரதான நுழைவாயில் பகுதியில் இருந்து கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்னதாக சென்னை புழல் மத்திய சிறையில் இருந்தும் இரண்டு கைதிகள் தப்பியனர். இந்நிலையில் தற்போது வானகரம் காவல் நிலையத்தில் இருந்து 17 வயது இளஞ்சிறார் தப்பியோடிய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கைதி தப்பியோட்டம்
என்ன நடந்தது
“24 மணி நேரம் தாண்டி ஒருவரை போலீஸ் காவலில் வைத்திருக்கக் கூடாது” - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
தொடரும் சம்பவங்கள்
சுத்தி வளைச்சுட்டாங்க.. நாகையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! எல்லாப் பக்கமும் அலசி ஆராயும் எஸ்பி! ஏன்?
கோவை- சென்னை