வண்டலூர் அரசு பள்ளி பாத்ரூமில்.. எம்எல்ஏ இப்பவே இங்கே வரணும்.. தவெக அரசு மீது பாய்ந்த பெற்றோர்! ஏன்

  • சென்னை: வண்டலூர் அரசு பள்ளி முன்பு ஒரே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. பட்டப்பகலில் தேர்வு நடந்துகொண்டிருந்த நேரத்தில், அதுவும் பள்ளி அருகிலேயே 10ம் வகுப்பு மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.. இதைக்கேட்டு கொந்தளித்து போன பெற்றோர்கள், வண்டலூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.. தவெக அரசை ஆவேசத்துடன் கேள்வி மேல் கேட்டு வருகிறார்கள்.. என்ன நடந்தது?

    Advertisement

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கண்டிகையில் இந்த அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு படித்து வருகிறார்கள்..

    Advertisement

    நேற்று மதியம் பள்ளியில் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மேலக்கோட்டையூரை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

    வண்டலூர் அரசு பள்ளி

    அப்போது 4 பேர் கொண்ட கும்பல், அருகில் உள்ள ஏரிக்கரை வழியாக பள்ளி சுற்று சுவரில் எகிறி குதித்து கழிப்பறைக்கு வந்த மாணவியை குண்டுக்கட்டாக ஏரிக்கரைக்கு தூக்கிச் சென்றனர். அப்போது மாணவி துடித்து அலறியுள்ளார். ஆனால் அவரது வாயில் துணியை வைத்து அடைத்து, அவரை தாக்கியும், மிரட்டியும் தூக்கிச் சென்றனர்.

    பிறகு ஏரிக்கரை பகுதியில் வைத்து மாணவியை 4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர்கள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.. பலாத்காரம் செய்த 4 பேரும் கஞ்சா போதையில் இருந்தார்களாம்.. பிறகு மாணவி மயங்கி கிடந்ததை பார்த்த பள்ளி ஊழியர்கள், உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்..

    Advertisement

    ஏரிக்கரையில் பாலியல் பலாத்காரம்?

    சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தாழம்பூர் போலீசார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். பள்ளி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யார் என்பதில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களா அல்லது அதே பள்ளியில் படிக்கும் சக மாணவர்களா என்ற விசாரணையும் நடக்கிறது.

    பள்ளியின் மோசமான நிலைமை

    ஆனால் இந்த சம்பவத்தைவிட இப்போது பள்ளியின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் தான் பெரும் கேள்வியை எழுப்புகிறது. பள்ளியை சுற்றியுள்ள சுற்றுச்சுவரை உயர்த்தித் தர வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பள்ளி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

    Advertisement

    அதுமட்டுமல்ல... பள்ளி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை சில சமூக விரோதிகள் உடைத்ததாகவும், மெயின் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து, லைட்டுகளை அணைத்துவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

    பெற்றோர்கள் ஆவேசம்

    இதனிடையே பள்ளியில் நடந்த இந்த சம்பவத்தை கேட்டு பெற்றோர்கள் கொந்தளித்து விட்டார்கள்... இதுகுறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்காததுடன், பள்ளியில் செக்யூரிட்டியை ஏன் நியமிக்கவில்லை? என்று கேட்டு பள்ளி முன்பு மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்..

    "பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தந்ததாக சொல்கிறீர்கள்? என்ன பாதுகாப்பு தந்திருக்கீங்க? அப்படிப்பட்ட பாதுகாப்பு இனியாவது வேண்டும் என்பதால்தான் நாங்கள் போராடுகிறோம்.. ஆன் தி ஸ்பாட்டில் எங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். சிங்கப்பெண் படை இன்னும் இங்கே காணோம்? இந்த ஊர் எம்எல்ஏவை இன்னும் காணோம்..

    Advertisement

    ஒயின் ஷாப்பை மூடுவதாக சொன்னார்கள்.. நாங்களும் சந்தோஷப்பட்டோம்.. ஆனால் இன்னும் மூடல.. அந்த ஒயின்ஷாப்பால்தான் இவ்வளவு பிரச்சனையும் வருகிறது.. அரசு பள்ளிகளின் வசதிகளை நேரில் வந்து பார்ப்பதாக சொன்னார்கள்.. ஆனால், இந்த பள்ளி வசதி எப்படி இருக்குன்னுகூட யாருமே வந்து பார்க்கல..

    செருப்படி தருகிறோம்

    நேற்று 10ம் வகுப்பு பெண்ணை பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.. அந்த நபர்களை கைது செய்து எங்கள் முன்பு கொண்டு வாங்க.. நாங்கள் செருப்படி தருகிறோம்.. புதரில் இழுத்து கொண்டுபோய் பலாத்காரம் செய்யும்வரை, பள்ளி நிர்வாகம் என்ன செய்துட்டு இருந்தது? அதுவரை கிளாஸ் டீச்சர் என்ன பண்ணிட்டு இருந்தாங்க?

    Advertisement

    10வது படிக்கும் அந்த குழந்தை இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறாள்.. எப்படி இருக்கிறாள் என்றுகூட சொல்லவில்லை.. பாதிக்கப்பட்ட பெண்ணின், பெற்றோர் வந்து, தங்கள் மகள் நன்றாக இருப்பதாக எங்களிடம் சொல்லட்டும்.. அப்போது எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும்? ஹெச்.எம், இதுவரை வாய் திறக்கலியே? பள்ளி குழந்தைகள் ஸ்கூல் போகவே பயப்படுகிறார்கள்?" என்றெல்லாம் கொந்தளித்து கூறுகிறார்கள்.

    English Summary

    Vandalur Government School Bathroom.. "MLA Must Come Here Now".. Chennai Parents Lash Out at TVK Govt! Why?