Vande Bharat: வெயிட்டிங் லிஸ்டே வராது.. தட்கல் பதிவும் இல்லை! வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் புக்கிங் ரூல்ஸ் தெரியுமா?

  • சென்னை: நம் நாட்டில் வந்தே பாரத் ரயில்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, தொலை துர பயணங்களுக்கு ஏற்ற வகையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விரைவில் தமிழகத்திலும் இந்த ரயில் சேவை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே நிலவும் நிலையில் மற்ற ரயில்களை போல அல்லாமல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் டிக்கெட் புக்கிங் வசதிகள் வேறுபட்டவையாகும். இதுபற்றி விவரமாக பார்க்கலாம்.

    Advertisement

    ரயில் பயணிகள் மத்தியில் வந்தே பாரத் ரயில்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகம் செய்யபட்டு வருகின்றன. இந்தியாவில் 3 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    Advertisement

    வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்

    சமீபத்தில் பெங்களூரில் இருந்து மும்பைக்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் சென்னை - கன்னியாகுமரி, சென்னை - திருவனந்தபுரம் உள்ளிட்ட நீண்ட தூர வழித்தடங்களுக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    பெங்களூர் - மும்பை இடையே இன்று முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! கட்டணம் எவ்வளவு? டிராவல் டைம் என்ன?

    வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களுக்கான விதிகளை அண்மையில் ரயில்வே வெளியிட்டது. இதன்படி, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் தட்கல் டிக்கெட் புக்கிங் ஆப்ஷன் கிடையாது. அதாவது, பயணத்திற்கு முந்தைய நாள் டிக்கெட் புக்கிங் வசதி இந்த ரயிலில் இல்லை. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 60 நாட்களில் இருந்து டிக்கெட் புக்கிங் வசதி மட்டுமே உள்ளது.

    Advertisement

    வெயிட்டிங் லிஸ்ட் வராது

    அதேபோல, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலுக்கு டைனமிக் அல்லது பிளெக்ஸி கட்டண முறை கிடையாது. அதாவது, டிக்கெட் புக்கிங் டிமாண்டிற்கு ஏற்றபடி கட்டணம் மாறாது. நிலையான கட்டணமே இருக்கும். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் அனைத்து டிக்க்கெட்டுகளும் ரெகுலர் ரிஷர்வேஷனில் மட்டுமே புக் செய்யலாம். மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கிடையாது.

    கன்பார்ம் டிக்கெட் மட்டுமே கிடைக்கும். அதேபோல பிற எக்ஸ்பிரஸ் ரயில்களில் வழங்கப்படுவது போல ஆர்.ஏசி டிக்கெட் ஆப்ஷன் இருக்காது. பயணிகள் கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவதை தவிர்க்கும் வகையில், வெயிட்டிங் லிஸ்ட் ஆப்ஷனே இல்லாமல் நேரடியாக கன்பார்ம் டிக்கெட் மட்டுமே புக் ஆகும்.

    Advertisement

    823 கோச்கள் உள்ளன

    வந்தே பாரத் ரயில் முழுவதும் ஏசி வசதி கொண்டது ஆகும். 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் 823 படுக்கைகள் உள்ளன. ஏசி 3 அடுக்கு : 611 படுக்கைகள், ஏசி 2 அடுக்கு 188 படுக்கைகள் ஏசி முதல் வகுப்பு 24 படுக்கைகள் என மொத்தம் 823 கோச்கள் உள்ளன.

    Vande Bharat Sleeper: வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இனி RAC இல்லை! 3000 கி.மீ.க்கு எவ்வளவு கட்டணம்?

    ரயில்வே ஊழியர்கள் மற்றும் பெண்களுக்காக இருக்கைகள் ஒதுக்கப்படும். ஏசி 3 அடுக்கு பெட்டியில் 6 படுக்கைகள் பெண் பயணிகளுக்காக ரிசர்வ் செய்யப்பட்டு இருக்கும். 21 படுக்கைகள் ரயில்வே ஊழியர்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்டு இருக்கும்.

    English Summary

    Vande Bharat Sleeper train: Following the overwhelming response to Vande Bharat trains in our country, Vande Bharat Sleeper trains—designed for long-distance travel—have been introduced. As passengers eagerly anticipate the launch of this service in Tamil Nadu, it is worth noting that the ticket booking process for Vande Bharat Sleeper trains differs from that of other trains. Let’s look at the details.