ஏப்ரல், மே மாதங்களில் வந்தே பாரத் ரயிலால் ரூ 163 கோடி வருமானம்! தெற்கு ரயில்வே மகிழ்ச்சி ரிப்போர்ட்

  • சென்னை: கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வந்தே பாரத் ரயில் சேவை மூலம் ரூ 163 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இந்த வருவாய் கடந்த ஆண்டை விட அதிகமாகும்.

    Advertisement

    வண்டி வண்டி ரயிலு வண்டி , வெள்ளைக்காரன் கொடுத்த வண்டி.. கூ சிக்கு புக்கு சிக்கு புக்கு... ரயில் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பேருந்தை காட்டிலும் ரயிலில் டிக்கெட் குறைவு, அலுப்பு தெரியாது. இதனால் ரயில் பயணத்தை மக்கள் விரும்புகிறார்கள்.

    Advertisement

    அதிலும் தற்போது மெட்ரோ ரயிலும் வந்துவிட்டதால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து மெட்ரோ ரயில் மூலம் பணிகளுக்கும் படிக்கவும் செல்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் பயணம் செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.

    2 கி.மீ. தூரத்தை கூட 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை ஆகும். இதனால் மெட்ரோ ரயில் பயணங்களை மக்கள் விரும்பி பயணிக்கிறார்கள். ஏசி வசதி கொண்ட மெட்ரோ ரயில்களில் எந்த சிரமமும் இன்றி பயணிக்கலாம்.

    அந்த வகையில் இந்தியாவில் முக்கிய நகரங்களை வந்தே பாரத் ரயில்கள் இணைக்கின்றன. அந்த வகையில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வ கோட்டங்கள் உள்ளன.

    Advertisement

    இவை தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுவை ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளை கொண்டு செயல்படுகிறது. சென்னை - மைசூர் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அது போல் சென்னை- கோவை, சென்னை- நெல்லை, சென்னை- விஜயவாடா, சென்னை- பெங்களூர், சென்னை-நாகர்கோவில், சென்னை-பெங்களூர், மங்களூர் டூ திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

    எக்ஸ்பிரஸ் ரயில்களை காட்டிலும் வந்தே பாரத் ரயில்கள் வேகமாக செல்லும், பயண நேரமும் குறைவு. எனவே டிக்கெட் கட்டணம் அதிகம் என்றாலும் இந்த வந்தே பாரத் ரயில் சேவை பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. பெர்த் வசதியும் உள்ளது. இதனால் மற்ற எக்ஸ்பிரஸ் ரயிலை காட்டிலும் மக்கள் வந்தே பாரத் ரயிலை விரும்புகிறார்கள்.

    Advertisement

    அந்த வகையில் 2026- 2027 நடப்பாண்டில் ஏபரல், மே மாதங்களில் வந்தே பாரத் ரயில்களில் 15.12 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதனால் 162.96 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த 2025- 2026 ஆம் ஆண்டு இதே ஏப்ரல், மே மாதங்களில் 11.41 லட்சம் பயணிகள் பயணித்தனர். அப்போது வருமானம் ரூ 119 கோடியாகும். கடந்த ஆண்டை விட இந்த நிதியாண்டில் வருவாய் அதிகரித்துள்ளது.

    அதாவது வந்தே பாரத் ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்கள் வரை காலியாக உள்ள இருக்கைகளை முன் பதிவு செய்ய அனுமதிக்கும் தற்போதைய முன்பதிவு வசதி பயணிகளுக்கு உதவியாக இருக்கிறது. இந்த வசதி, கடைசி நிமிடத்தில் பயணிக்க வேண்டிய பயணிகளின் சிரமத்தை போக்குகிறது. இதனாலும் வந்தே பாரத் ரயில்களில் அதிகம் பேர் பயணித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

    Advertisement

    இந்தியாவில் முதல் வந்தே பாரத் சரக்கு ரயிலும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலில் ஏசி வசதி, பாதுகாப்பு, ஜிபிஎஸ் டிராக்கிங் உள்ளிட்ட வசதிகள் காணப்படுகின்றன. எல்லாவற்றையும் விட எக்ஸ்பிரஸ் ரயில்களை காட்டிலும் பயணம் நேரம் என்பது 1.30 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை குறைகிறது.

    English Summary

    Southern Railway release the report comprising that Vande Bharat rails generates Rs 163 crore profit during April and May this year.