விடுதலை சிறுத்தைகள் வன்னி அரசு அமைச்சராவதால்.. திமுக கூட்டணியின் எதிர்காலம் என்ன?

  • சென்னை: தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது.. வி.சி.க. எம்.எல்.ஏ. வன்னி அரசு நாளை காலை முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பதவியேற்கிறார். திருமாவளவன் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.. இதுகுறித்த தகவல்களை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

    Advertisement

    தமிழ்நாட்டின் அரசியல் களம் இப்போது ஹை டென்ஷனில் உள்ளது.. முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், இதுவரை யாரும் எதிர்பாராத விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழக அமைச்சரவையில் விசிக

    இன்று தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட 23 பேருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் இன்று பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.. 33 அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கவர்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார்..

    ஆனால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய இரண்டு முக்கிய துறைகள் இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படாமல் காலியாக இருந்தன.

    Advertisement

    இதனிடையே, தமிழக அமைச்சரவையில் விசிக இடம் பெறுவது குறித்து இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்னதாகவே சொல்லியிருந்தார்.. பெரும்பாலான நிர்வாகிகள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் என்றும், உயர்மட்ட நிர்வாகிகளிடம் ஆலோசித்தே அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெளிவாக கூறியிருந்தார்.

    இந்த அறிவிப்பின்படி விசிக எம்எல்ஏ வன்னி அரசு நாளை காலை 10 மணிக்கு பதவியேற்கிறார் என்பது உறுதியாகியுள்ளது..

    ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கீடு?

    அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவை இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் ஐ.யு.எம்.எல். கட்சிக்கு சிறுபான்மையினர் நலத்துறையும், வி.சி.க.வுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Advertisement

    தஞ்சை பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜகான் நாளை அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு ஐ.யு.எம்.எல். கட்சி பரிந்துரை செய்திருப்பதாகவும், முதல்வர் விஜய் கவர்னருக்கு அந்த பெயரை அனுப்பியிருப்பதாகவும் தெரிகிறது.. ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறை இதுவரை தலித் சமூகத்தினருக்கு நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு வந்தது என்பது வரலாற்று உண்மை..

    வரலாற்று முக்கியத்துவம்

    தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்த பிறகு கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.. ஆனால், விடுதலை சிறுத்தைகள் என்பது தமிழகத்தில் தலித் உரிமைகளுக்காக போராடும் முக்கியமான அரசியல் கட்சியாகும்.. பொதுவாக பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் செல்லும் இக்கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பது தலித் பிரதிநிதித்துவம் வலுப்பெறுவதாக பார்க்கப்படுகிறது..

    Advertisement

    அதுமட்டுமல்ல திமுக கூட்டணிக்குள் வி.சி.க நேரடியாக அமைச்சரவையில் சேருவது கூட்டணியை இன்னும் பலமானதாக மாற்றும்... இதுவரை கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வந்த வி.சி.க, இனி அமைச்சரவைக்கு உள்ளே வந்து முடிவுகளை எடுக்கும் என்பதால், கூட்டணிக்குள் வி.சி.க-வின் செல்வாக்கும், அதிகாரமும் பல மடங்கு கண்டிப்பாக உயரும்.

    திமுக என்ன செய்யும்

    இனி வரும் காலங்களில் எந்த ஒரு முக்கியமான அரசியல் முடிவை எடுப்பதாக இருந்தாலும், வி.சி.க-வின் கருத்தைக் கேட்டுத்தான் தி.மு.க செயல்பட வேண்டிய சூழல் உருவாகும்..

    ஆனால், விசிகவுக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிட்டதால், கூட்டணியில் உள்ள மற்ற சிறிய கட்சிகளும் எங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று உரிமை கேட்டு வரலாம்.. இதனால் முதலமைச்சர் விஜய் மற்ற கட்சிகளைச் சமாளிக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாவார்.. ஆக மொத்தம், இனி திமுக மட்டும் தனித்து முடிவெடுக்கும் காலம் மாறி, கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து ஆட்சி நடத்தும் ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    Vanniarasu Set for tn Minister Post Tomorrow? VCK’s Sudden Move Sparks Fresh DMK Alliance Questions