Beef: சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு மாட்டிறைச்சி! வன்னியரசு கொடுத்த அப்டேட்!

  • சென்னை: சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதை போல் மாட்டிறைச்சி வழங்குவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு ஆய்வு மேற்கொண்டார்.

    Advertisement

    அப்போது அங்கு வழங்கப்பட்டு வரும் உணவு, மெனு , தரம் குறித்து ஆய்வு செய்த அவர் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்கிருந்த மாணவர்கள் சிக்கன், மட்டன் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அது போல் மாட்டிறைச்சியையும் உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக சொல்லப்படுகிறது.

    இந்த கோரிக்கைகளை கேட்ட அமைச்சர், இது குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார். எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது குடிநீர் வசதி, உணவின் தரம், ஊழியர்கள் பிரச்சனை குறித்து கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    இதையடுத்து விடுதி நிர்வாகம் சார்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. உணவு பட்டியலிலும் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் விளையாட்டு மைதானமும் திறந்து வைக்கப்பட்டதாம்.

    இதுகுறித்து அமைச்சர் வன்னியரசு கூறுகையில் மாணவர்களின் விருப்பம் மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு உணவு பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் உப்புமா, கிச்சடி போன்ற உணவுகள் பரிமாறப்பட்டன. ஆனால் தற்போது இட்லி, தோசை உள்ளிட்ட மாணவர்கள் விரும்பும் உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமைகளில் சிக்கன் பிரியாணி வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

    English Summary

    Minister Vanniarasu explains about Beef to be placed in Social justice hostels. He reviewed in Saidapet hostels and students demanded Beef.