38 தொகுதிகளில் அதோகதி.. சனி பெயர்ச்சிக்கு முன்பு திமுக பலன்.. ஆர்எஸ் பாரதிக்கு விசிக சுளீர் பதிலடி

  • சென்னை: தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல், இடைத்தேர்தல் ஆகியவற்றில் தவெக வெற்றி பெற்றுள்ளது. திமுக தோல்வியடைந்து, கூட்டணியும் உடைந்துவிட்டது. கூட்டணியில் இருந்த பழைய கட்சிகளுடன் திமுக வாக்குவாதம் செய்து வருகிறது. இந்நிலையில் கூட்டணி கட்சியினரை ஏழரை சனி என குறிப்பிட்டு ஆர் எஸ் பாரதி விமர்சித்தார். இந்நிலையில் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு ஆர் எஸ் பாரதிக்கு விசிக நிர்வாகி பாலாஜி பதிலளித்துள்ளார்.

    Advertisement

    விசிக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாலாஜி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் சனி பெயர்ச்சிக்கு முன் பலன் என்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "வேப்பனஹள்ளி (138), குளித்தலை (579), கோவில்பட்டி (843) ஆகிய 3 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 1,000க்கு கீழ்தான். திண்டுக்கல் (1131), திருமயம் (1492), புதுக்கோட்டை (1867) ஆகிய 3 தொகுதிகளில் 2,000க்கு கீழ் தான் வாக்கு வித்தியாசம். கோயம்புத்தூர் தெற்கு (2271), உளுந்தூர்பேட்டை (2277) திருவண்ணாமலை (2455), திட்டக்குடி (2629), உடுமலைப்பேட்டை (2882) ஆகிய 5 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 3,000 தான்.

    Advertisement

    வாக்கு வித்தியாசம்

    பேராவூரணி (3162), வந்தவாசி (3333), பரமக்குடி (3548) ஆகிய 3 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 4,000க்கு கீழ் தான். விழுப்புரம் (4119), பொள்ளாச்சி (4627), திருச்சி மேற்கு (4786), ரிஷிவந்தியம் (4862), அருப்புக்கோட்டை (4943) ஆகிய 5 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 5,000க்கு கீழ்தான். சிதம்பரம் (5747), திருச்செந்தூர் (5872), சாத்தூர் (5989) ஆகிய தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 6,000க்கு கீழ் தான்.

    கடையநல்லூர் (6253), வாசுதேவநல்லூர் (6805), போடிநாயக்கனூர் (6805) ஆகிய 3 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 7,000க்கு கீழ்தான். வானூர் (7034), ஆம்பூர் (7131), சேப்பாக்கம் (7140), நாகர்கோவில் (7570), குறிஞ்சிப்பாடி (7589), ஆலங்குளம் (7798) ஆகிய 6 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 8,000க்கு கீழ்தான். குன்னூர் (8228), விளாத்திக்குளம் (8228), பூம்புகார் (8260), திருவையாறு (8555) ஆகிய 3 தொகுதிகளில் வாக்கு வித்தியாச்ம் 9,000க்கு கீழ்தான்.

    Advertisement

    நம்புங்க.. நம்புங்க..

    வால்பாறை (9371), ஆண்டிப்பட்டி (9554), நாகப்பட்டினம் (9781) ஆகிய 3 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000க்கு கீழ் தான். மொத்தம் 38 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 1,000 முதல் 10,000 தான். ஜோதிடம், கிரகம், நட்சத்திரம், ராசி என அதில் நம்பிக்கை உள்ளவர்களிடம், சனி பெயர்ச்சி நன்மை தரும் நம்புகிறார்களே என்றேன். அதற்கு அவர், அப்படியில்லை அது அவரவர் ராசிக்கும், சனி எந்த வீட்டில் அமர்கிறார் என்பதை பொறுத்தது என்றார். உங்களுக்கு என்னப்பா, சனி பெயர்ந்தது நல்லதென நம்பறீங்க. நம்புங்க. நம்புங்க" என்று கூறியுள்ளார்.

    English Summary

    VCK functionary Balaji hits back at R.S. Bharathi’s ‘seven-and-a-half-year Saturn’ jibe at alliance parties, citing Tamil Nadu election results.