Vanni Arasu: கையை தட்டிவிட்ட திருமாவளவன்.. மேடையிலேயே முகம் மாறிய வன்னி அரசு! விசிக மாநாட்டில்

  • சென்னை: உளுந்தூர்பேட்டையில் நேற்று நடைபெற்ற விசிக மாநாட்டின் போது, திருமாவளவன் சுடர் ஒளியை ஏந்தி பிடித்தார். சுடர் ஒளியை திருமாவளவனுடன் இணைந்து வன்னி அரசும் பிடித்து இருந்த நிலையில், அவரது கையை திருமாவளவன் தட்டிவிட்டு தானே பிடித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    வன்னி அரசு அமைச்சராகபொறுப்பேற்ற பிறகு அவரது செயல்பாடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், திருமாவளவனின் மேற்கூறிய செயல்பாடு அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

    Advertisement

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், விசிக சார்பில் நேற்று மாலை தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தலைமை தாங்கினார். அமைச்சர் வன்னி அரசு, கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 125 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முகம் மாறிய வன்னி அரசு

    முன்னதாக மாலை 4 மணியளவில் மாநாட்டு திடலுக்கு வருகை தந்த திருமாவளவனை தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது அங்கு 700 மீட்டருக்கு அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக்கி சுடர் ஒளி ஏந்தியபடி நடந்து சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த மார்பளவு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். திருமாவளவன் சுடர் ஒளியை கையில் ஏந்தி நின்ற போது அவருடன் அமைச்சர் வன்னி அரசும் அருகில் நின்றார்.

    Advertisement

    திருமாவளவன் சுடர் ஒளியை தொண்டர்களை நோக்கி காண்பித்தார். அப்போது வன்னி அரசுவும் திருமாவளவன் கையை பிடித்தவாறு சுடர் ஒளியை ஏந்தி பிடித்தார். ஆனால் சிறிது நேரத்தில் வன்னி அரசுவின் கையை திருமாவளவன் தட்டி விட்டார். இதனால் வன்னி அரசுவின் முகம் ஒரு நிமிடம் மாறிப்போனது. திருமாவளவன் மட்டுமே சுடர் ஒளியை ஏந்தி பிடித்து இருந்தார். மேடையில் வைத்தே திருமாவளவன் வன்னி அரசுவின் கையை தட்டிவிட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வன்னி அரசு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவரது செயல்பாடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், திருமாவளவனின் மேற்கூறிய செயல்பாடு அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

    Advertisement

    திருமாவளவனை சூழந்த தொண்டர்கள்

    முன்னதாக மாநாட்டு திடல் நிரம்பி வழிந்ததால், ஏராளமான தொண்டர்கள் வெளியேயும் நின்று கொண்டு இருந்தனர். திருமாவளவன் ரேம்ப் வாக்கில் வந்தபோது அங்கும் இங்குமாக தொண்டர்கள் ஏறத் தொடங்கினர். திருமாவளவனை செல்ல விடாமல் முன்னும் பின்னுமாக ஏறினர். உடனே விசிக தொண்டரனி மற்றும் பவுன்சர்கள் அவர்களை கட்டுப்படுத்தினர். கீழே இறங்காமல் இருந்தவர்கள் சிலரை பவுன்சர்கள் தள்ளிவிட்ட சம்பவமும் நிகழ்ந்தது.

    இதன்பிறகு மாநாட்டு திடல் மீதும் விசிக தொண்டர்கள் ஏறத்தொடங்கினர். இதனால் திருமாவளவன் பேச முடியாத சூழல் உருவானது. திருமாவளவனை சுற்றிலும் தொண்டர்கள் குவிந்தனர். தொண்டர்களுக்கு நடுவே தான் திருமாவளவன் பேசினார். அப்போது அவர் தவெகவுடன் விசிக கூட்டணி வைத்துள்ளதாக தெரிவித்தார். திருமாவளவன் பேசியதாவது:-

    Advertisement

    விசிக - தவெக கூட்டணி

    விசிக தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் சக்தி என்பதை இம்மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. நாம் இப்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். இனி வரும் காலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழகத்தில் ஆளும் கட்சியாக வளர வேண்டும். இப்போது முதல்வர் ஜோசப் விஜய், அன்பு சகோதரர் விஜய்யுடன் நாம் கூட்டணி வைத்திருக்கிறோம். விசிகவும், தவெகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும். இங்கே கட்டுக்கடாங்காத கும்பலை விடவும், வெளியே லட்சக்கணக்கான சிறுத்தைகள் திரண்டு இருக்கிறார்கள். எனது அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கிற அனைவருக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்பாக கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்'என்றார்.

    English Summary

    Vanni Arasu: During the VCK conference held yesterday in Ulundurpet, Thirumavalavan held a flaming torch. While Vanni Arasu was also holding the torch alongside him, Thirumavalavan swatted his hand away and held it himself. A video of this incident is going viral on social media.