எம்எல்ஏக்களுக்கு கார்.. நாங்க வரவேற்கிறோம் தமிழக அரசின் முடிவு நியாயமானது! திருமாவளவன்

  • சென்னை: தமிழக அரசு எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்குவதை விசிக வரவேற்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், விருப்பம் இல்லாதவர்கள் வாங்க மறுத்தால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். கார் வழங்கும் அரசின் முடிவு நியாயமானது என தெரிவித்தார்.

    Advertisement

    எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்ததற்கு கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. தமிழக அரசு கடும் நிதிப்பற்றாக்குறையில் சிக்கி தவித்து வரும் நிலையில், தற்போது கார் தேவைதானா? என்று விமர்சனங்கல் எழுந்துள்ள சூழலில், அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு திமுக எம்.எல்.ஏக்கள் யாரும் காரை பெறப்போவது இல்லை என்று திமுக அறிவித்துள்ளது.

    Advertisement

    திருமாவளவன் பேச்சு

    பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதே நிலைப்பாட்டை அறிவித்துள்ள சூழலில், தவெக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, கார் வழங்குவதாக அறிவித்துள்ளதை வரவேற்றுள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விசிக தலைவர் திருமாவளவனிடம், இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த திருமாவளவன், "எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்குவதை விசிக வரவேற்கிறது. விருப்பம் இல்லாதவர்கள் வாங்க மறுத்தால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். கார் வழங்கும் அரசின் முடிவு நியாயமானது.எங்கள் எம்எல்ஏ ஜோதிமணியின் கோரிக்கையினை ஏற்று எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் கார் வழங்க முன்வந்து இருப்பதை வரவேற்கிறோம்.

    Advertisement

    விஜய் அரசு தவறான பெயரை எடுக்கவில்லை

    சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் விடுத்துள்ள அறிக்கை கவனிக்கப்படக்கூடிய ஒன்று தான். தலைமைச் செயலாளர் போன்று உயர் பதவிகளில் இருப்பவர்கள் விஜய் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தக்கூடாது என சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இதை முதல்வர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    திமுகவை வலிமையோடு நடத்த வேண்டும் என்று கட்சி பொறுப்புகளுக்கு வயது வரம்பு நிலைப்பாட்டை முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். இதே போன்று தான், எங்களது விசிக கட்சியும் வயது வரம்பை நிர்ணயம் செய்து தான் பொறுப்பாளர்களை நியமித்து வருகிறது. விஜய்யின் தவெக அரசு 100 நாட்களில் பொதுமக்களிடையே எந்த ஒரு தவறான பெயரையும் எடுக்கவில்லை.

    Advertisement

    முதல்வர் விஜய் வருகைக்கு பிறகு விசிக கட்சி கரைந்து போய்விட்டது என்று 3 மாதமாக சமூக வலைத்தலங்களில் அவதூறு பரப்பியவர்கள் முகத்தில் உளுந்தூர்பேட்டை மாநாடு மூலம் கரி பூசப்பட்டு இருக்கிறது" என்று கூறினார்.

    English Summary

    Thirumavalavan has stated that the VCK welcomes the Tamil Nadu government's move to provide cars to MLAs. He further noted that if any MLAs choose not to accept the car, it is their personal preference, adding that the government's decision to provide the vehicles is justified.