திமுக அதிமுக கூட்டணி கிசுகிசு.. தவெக அமைச்சரவைக்கு நோ.. மீண்டும் குட்டையை குழப்பிய திருமாவளவன்

  • சென்னை : சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி உதவிகளுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயுஎம்எல் ஆகியோர் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளனர். திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க முயற்சி செய்தது குறித்தும், தன்னை முதல்வராக்க நடந்த முயற்சி குறித்தும் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்திருந்தார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. சட்டென்று திருமாவளவன், கிசுகிசுக்கள் அடிப்படையில் பேசினேன் என ரிவர்ஸ் அடித்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது , "குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மீண்டும் தேர்தல் வந்துவிடக்கூடாது, அதற்கு விசிக துணையாக இருந்துவிட கூடாது என தவெகவை வெளியில் இருந்து ஆதரிக்கிறோம். இதில் ரகசியமாக எதுவும் நடக்கவில்லை. எல்லாமே வெளிப்படையாக நடக்கிறது. எல்லாரை சுற்றியும் வதந்தி நடக்கும். திமுக கூட்டணியில் தொடர்கிறோம்.

    Advertisement

    கிசு கிசு, முணுமுணுப்பு

    அவர்கள் எப்போது அழைத்தாலும் ஆலோசனை நடத்துவோம். விசிக யாருடனும் பேரம் பேசவில்லை. திமுக - அதிமுக கூட்டணி தொடர்பாக என்னிடம் நேரடியாக பேசவில்லை. என்னை முதல்வராக்க திமுக - அதிமுக என்னை அதிகாரபூர்வமாக அணுகவில்லை. அனுமானமாக கேட்ட கேள்விக்கு அவ்வாறு பதில் சொன்னேன். சில நலம் விரும்பிகளே பேசினர். கிசுகிசுக்கள், முணுமுணுப்புகள் அடிப்படையில் பேசினேன்.

    நாங்கள் ஒரு கட்சி நடத்துகிறோம். கம்யூனிஸ்ட்கள் முடிவு எடுக்கும்போதே நாங்களும் முடிவு எடுப்போம் என நினைக்க கூடாது. எங்கள் கட்சி தோழர்களிடம் பேசி தான் நாங்கள் முடிவுசெய்வோம். உடனே பேரம் பேசுகிறோம் என சொல்வது நியாயமல்ல. எங்களுக்கு அவகாசம் தேவைப்பட்டது. இரண்டு இடங்களை வைத்துக் கொண்டு நான் யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியமில்லை

    Advertisement

    தவெக அமைச்சரவைக்கு நோ

    தவெகவை வெளியில் இருந்து தான் ஆதரித்துள்ளோம். இயற்கையாக நடந்த விஷயத்தை கால தாமதம் என்று வதந்தி பரப்ப கூடாது. பாஜக ஆதரவு கட்சி என்று தவெகவை விமர்சித்துள்ளேன். அந்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராவது எளிதல்ல. தவெக அமைச்சரவையில் இடம்பெற மாட்டோம். அதை ஏற்கனவே கூறிவிட்டேன்" என்றார்.

    English Summary

    VCK Thirumalavan: VCK Thirumalavan said, DMK ADMK alliance I spoke is based on Rumor. We never participate in TVK Ministry.