சென்னை: முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்த பிறகு பேட்டியளித்த விசிக தலைவரி தொல் திருமாவளவன், தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடர எங்கள் ஆதரவு இருக்கும் என கூறினார். மேலும், விசிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதல்வரிடம் வழங்கினேன் என்றும், மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என வலியுறுத்தினோம் எனவும் கூறினார். திருமாவளவன் பேசியதாவது:
தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடர எங்கள் ஆதரவு உண்டு என முதல்வர் விஜய்யிடம் கூறினோம். அரசுநிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றியை தெரிவித்தோம். மாநில சுயாட்சி ஓங்கி ஒலிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். விசிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதல்வரிடம் கூறினோம். மேகமகலை விவகாரத்தில் உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். சமூக சிக்கல்கள், வன்முறைகள், படுகொலைகள் ஆகியவற்றிற்கு ஒரு குறிப்பிட்ட கட்சி, ஆட்சி மட்டுமே பொறுப்பேற்க முடியாது. நாம் ஒவ்வொருவருக்கும் அதில் பொறுப்பு உள்ளது. அதனை கட்டுப்படுத்த சமூக ஆர்வர்லர்களுக்கும் பொறுப்பு உள்ளது. தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள், போதைப்பொருள் பழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த அல்லது ஒழித்துக்கட்ட முதல்வர் தனிப்பட்ட முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். விசிகவின் வீரியம் எங்கேயும் நீர்த்து போகவில்லை. எந்த இடத்தில் எப்படி குரலை உயர்த்த வேண்டுமோ அப்படி உயர்த்தி கொண்டுதான் இருக்கிறோம். தவெகவுடன் கைகோர்த்து இருக்கிறோம். தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தோம் எங்களையும் அமைச்சரவையில் இணைத்து கொண்டு இருக்கிறார்கள். கூட்டணி அமைப்பது தொடர்பாக முதல் கூட்டம் நடைபெற்றுள்ளது. சட்டமன்றம் கூட்டத்தொடர் முடிந்த பிறகு அடுத்த கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடக்கிறது என்று முதல்வர் விஜய் கூறினார். தவெகவுடன் இணைந்து பயணிப்போம் என்று நேற்றைய மாநாட்டில் உறுதிப்படுத்தியுள்ளோம். கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதன் மூலம் நாங்களும் ஆளும் கட்சி என்ற அடையாளத்தை பெற்று இருக்கிறோம். இந்த வளர்ச்சியை மக்கள் எங்களுக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் விருப்பபடி எங்கள் அரசியல் இருக்கும்" என்றார்.தவெகவுடன் கைகோர்த்து இருக்கிறோம்
நாங்களும் ஆளும் கட்சி