சென்னை: தமிழகத்தில் யாருடைய தயவிலும் ஆட்சி நடைபெறவில்லை. மக்கள் தயவில் தான் ஆட்சி நடைபெறுவதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியதற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் பதில் அளித்துள்ளார். தோழமை கட்சிகளின் ஆதரவை அவர் புறந்தள்ளும் வகையில் பேசியிருக்க வாய்ப்பில்லை. எனவே இதை பெரிதாக்க வேண்டிய தேவையில்லை என்று கூறினார்.
தவெக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளித்தாலும், ஆட்சியில் நடக்கும் குளறுபடிகள், சட்டம் ஒழுங்கு குறித்து நேரடியாக கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் சிபிஎம், சிபிஐ ஆகிய இடதுசாரிகள் கட்சிகள் வைத்து வருகிறது. இது குறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக ஆட்சியில் ஊழல்கள் நடந்ததா இல்லையா? என்றும் இடதுசாரிகள் கட்சிகள் மீது வருத்தம் உள்ளதாகவும் பேசியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த சிபிஎம் மாநில முன்னாள் செயலாளர் முத்தரசன், நாங்கள் ஆதரவை திரும்பப் பெற்றால் அமைச்சரவையே இருக்காது.. ஆளுநர் எப்போது நாங்கள் ஆதரவை வாபஸ் பெறுவோம் என காத்துக் கொண்டு இருப்பதாகவும், இது எல்லாம் தெரிந்து தான் ஆதவ் அர்ஜுனா பேசுகிறாரா இல்லையா என்று கேள்வி எழுப்பி இருந்தது. இதற்கு தமிழகத்தில் யாருடைய தயவிலும் ஆட்சி நடைபெறவில்லை. மக்கள் தயவில் தான் ஆட்சி நடைபெறுவதாக அமைச்சர் ராஜ்மோகன் பதில் அளித்து இருந்தார். இது குறித்து இன்று கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- மக்கள் தவெகவுக்கு பெரும்பான்மை இடங்களை தந்துள்ளார்கள். வெற்றி பெற வைத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் தான் காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கொடுத்து இருக்கிறோம். ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்கள், போதமைக்கு எவ்வளவு இடங்களோ அந்த இடங்களுக்கு ஆதரவாக கை கோர்த்து இருக்கிறோம். ஆகவே மக்களுடைய தீர்ப்பு.. தவெக பெரும்பான்மை பெற்று இருக்கிறார்கள் என்ற தொனியில் அமைச்சர் அந்த கருத்தை சொல்லியிருக்கலாம். தோழமை கட்சிகளின் ஆதரவை அவர் புறந்தள்ளும் வகையில் பேசியிருக்க வாய்ப்பில்லை. அவர்களுடைய ஆதரவு இல்லாமல் ஆட்சி நடத்துகிறோம் என்ற பொருளில் அவர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன். எனவே இதை பெரிதாக்க வேண்டிய தேவையில்லை. என்றார். மேலும் பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைவது பற்றி பேசிய திருமாவளவன் கூறியதாவது:- பொதுமக்கள் கருத்தை அறியாமல் இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இல்லை. அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் கூட அந்த பகுதியில் வாழும் குடிமக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கருத்தறிய வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்று. சட்டப்பூர்வமான ஒன்று. நான் தொடக்கத்திலேயே சொன்னேன்.. அரசாணை பிறப்பிக்கப்பட்டாலும் கூட மக்களின் கருத்தறிந்து அதன் பிறகு தான் அரசு இறுதி முடிவு செய்யும் என்று சொல்லியிருந்தேன். இப்போதும் அதே கருத்தைத் தான் சொல்கிறேன். சுற்றுப் பகுதியில் உள்ள மீனவ பெருங்குடி மக்களின், பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு அரசு முடிவுகளை எடுக்கும். தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சியில் ரெண்டே ரெண்டுக்கு தான் போட்டி.. ஒன்று மின்வெட்டு இன்னொன்று அரிவாள் வெட்டு என முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பேசியது பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த திருமாவளவன், "அது எதிர்க்கட்சிகளுடைய கருத்து" என பதில் அளித்தார்.திருமாவளவன் பதில்
மக்களுடைய தீர்ப்பு..
மு.க ஸ்டாலின் பேச்சுக்கு பதில்