ஜனநாயக விரோதம்.. திக பரப்புரைக்கு அனுமதி வழங்க வேண்டும்.. முக்கிய கோரிக்கை வைத்த திருமாவளவன்

  • சென்னை: திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகன பரப்புரைக்கு உரிய முறைப்படி முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தும் காவல் துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும், அனுமதி அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி அளிக்க வேண்டும். 'நீட்' தேர்வையும், முன்னேறிய சமூகத்தினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென 30-07-2026 முதல் 02-08-2026 வரை இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் அணி, மற்றும் மகளிர் பாசறை ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.

    Advertisement

    உரிய முறைப்படி முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தும் அதற்குக் காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும்.

    'நீட்' தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலு சேர்க்கக்கூடிய திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது.

    திராவிடர் கழகத்தின் இந்தப் பரப்புரைக்கு அனுமதி வழங்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Thirumavalavan requests Chief Minister Vijay to grant police permission for the Dravidar Kazhagam's campaign.