ஜெம் வீரமணி கைது.. 26 நாட்களுக்கு பின் வாய் திறந்த எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்.. பின்னணி என்ன?

  • சென்னை: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி கைது செய்யப்பட்டு 26 நாட்களுக்கு பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் கருத்து தெரிவித்துள்ளனர். தவெக நேரடியாக திமுக ஆட்சியில் ஜெம் வீரமணி காப்பாற்றப்பட்டதாக விமர்சித்து வந்த நிலையில், இருவரும் தாமதமாக கருத்து தெரிவித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் சாந்தி, மகேந்திர சிம்கன், உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    இவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் அவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்று, வீடியோக்களை கைப்பற்றும் நோக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்க்க பல கோடி ரூபாய் பணம் கைமாறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இதனால் வழக்கின் விசாரணை அதிகாரிகளாக இருந்த உதவி ஆணையர் யாஸ்மின், ஆய்வாளர் மகேஷ் குமார் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களிடம் வழக்கை முடித்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா, அவ்வாறு நடவடிக்கை எடுக்க யாரேனும் அதிகாரிகள் அல்லது பிற நபர்கள் யாரும் நிர்பந்தம் கொடுத்தார்களா என்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

    Advertisement

    இந்த விவகாரத்தில் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மட்டுமல்லாமல் பல்வேறு காவல்துறை பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனிடையே திமுக ஆட்சியில் அக்டோபர் மாதமே போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட போதும், அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்ற கேள்விகள் எழுந்துள்ளன.

    நீதிபதி பத்மாவின் அறிவுறுத்தல் காரணமாகவே வழக்கு முடித்து வைக்கப்படாமல் இருந்தது. அதேபோல் வீரமணி கைது செய்யப்பட்டு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் தலைமையும் தாமதமாகவே கருத்து தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 29ஆம் தேதி வீரமணி கைது செய்யப்பட்டார். கைது சம்பவம் நடந்து 26 நாட்களுக்கு பின் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    English Summary

    Veeramani Case: Edappadi Palaniswami and Stalin Speak Out 26 Days After Gem Granites Veeramani Arrest