வீரமணி சில்மிஷ கேஸ்! சிறுமி வாக்குமூலம் பார்த்த விஜய்? ஒருத்தரையும் விடாதீங்க.. சாந்தி ஆடிய ஆட்டம்

  • சென்னை: வீரமணி விவகாரத்தை முதல்வர் விஜய் கையில் எடுத்துள்ளார்.. அதேபோல புரோக்கர் சாந்தியின் ரீல்ஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.. என்னா ஆட்டம்? அளவுக்கு அதிகமான பணம் கொழித்ததால் வந்த திமிரிலும் மமதையிலும் தான், இவர்கள் ரீல்ஸ் வீடியோக்களில் குத்தாட்டம் போட்டு ஆட்டம் போடுகிறார்கள்.. இந்த பெண்ணுக்கு, கடந்த வருடம் எம்பி ஒருவரின் கையால் "ஐகான் விருது" (Icon Award) வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறது" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    Cheyyaru Balu சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "பாதிக்கப்பட்ட 9 சிறுமிகளின் அந்த வாக்குமூலங்கள் அடங்கிய வீடியோவை முதல்வர் விஜய் நேரடியாக பார்வையிட்டிருப்பார் என்றே நினைக்கிறேன்.. ஏனென்றால், இதில் தொடர்புடைய ஒருத்தனையும் விடக்கூடாது என்று என காவல் துறைக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சென்னை மாநகர கமிஷனர், டிஜிபி ஆகியோர், தினமும் இந்த வழக்கு குறித்த அறிக்கையை முதல்வரிடம் நேரில் சமர்ப்பித்து வருகிறார்கள்..

    Advertisement

    ஜெம் வீரமணி அட்டகாசம்

    செல்வாக்கு, பணபலம் மற்றும் அதிகார பலத்தைக் கொண்டு இத்தனை காலம் தப்பித்து வந்த ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் காவல் துறை அதிகாரிகளுக்கும், ஒரு விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் உதவி ஆணையர் (AC) ஆகியோருக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

    அத்துடன், ஜெம் வீரமணிக்கு பெண் புரோக்கராக செயல்பட்ட சாந்தி என்பவர், "எனக்கு 13 வயதாக இருக்கும்போதே வீரமணி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினான்" என வீடியோ வெளியிட்டுள்ளார்.. தனக்கு இப்படியாகிவிட்டது என்று இந்த பெண் இப்போது சொல்கிறார், இப்படித்தானே அந்த பிஞ்சு குழந்தைகளுக்கும் இருந்திருக்கும்? இந்த பெண்தானே, அந்த குழந்தைகளை பிரெயின்-வாஷ் செய்து வீரமணியிடம் அழைத்து சென்றவர்.

    Advertisement

    சாந்தியின் ரீல்ஸ் வீடியோ

    சாந்தியின் ரீல்ஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.. என்னா ஆட்டம்? அளவுக்கு அதிகமான பணம் கொழித்ததால் வந்த திமிரிலும் மமதையிலும் தான், இவர்கள் ரீல்ஸ் வீடியோக்களில் குத்தாட்டம் போட்டு ஆட்டம் போடுகிறார்லகள்.. இந்த பெண்ணுக்கு, கடந்த வருடம் எம்பி ஒருவர் கையால் "ஐகான் விருது" (Icon Award) வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறது.

    இப்போது எந்த தயவுதாட்சண்யமும் இன்றி தற்போது சட்டம் தன் கடமையைச் செய்து வருகிறது. ஆனால், பலரும் இந்த விஷயத்தில் பேசாமல் அமைதி காக்கிறார்களே ஏன்?

    திரைத்துறை கண்டனங்கள் எங்கே

    கமல்ஹாசன் தனது கண்டனத்தைப் பதிவிட்டிருக்கிறார். ஆனால், சினிமாவில் சமூகப் போராளிகள் போலப் பெரிய அளவில் பேசுபவர்கள் வாய் திறக்கவில்லை.. தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டுவதற்குப் பதிலாகப் பள்ளிக்கூடங்களுக்குச் செலவழித்திருக்கலாம்" என்று முன்பு கேள்வி கேட்ட பெண் நடிகையும் இந்த ஜெம் வீரமணி விவகாரத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் முற்றிலும் அமைதியாக இருக்கிறார்கள்..

    Advertisement

    அன்று எக்ஸ்பிரஸ் அவென்யூ பகுதியில் "யார் அந்த சார்?" என்ற போர்டுகளைப் பிடித்து போராட்டம் நடத்திய அதிமுக போன்ற எதிர்க்கட்சிகள்கூட, இந்த ஜெம் வீரமணி விஷயத்தில் அமைதி காக்கிறார்கள்..

    சென்னையின் மையப்பகுதிகளிலும், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 100 கிரவுண்ட் இடத்திலும் பள்ளிகள் மற்றும் ஜிம் நடத்த ஜெம் வீரமணிக்கு எவ்வளவு செல்வாக்கு இருந்திருக்கும்? இங்கேயும் அந்த "யார் அந்த சார்?" என்ற கேள்வி எழுகிறது?

    கூச்ச நாச்சமில்லாத குற்றச்சாட்டு

    மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்காகத்தான் முதல்வர் விஜய் இந்த வீரமணி விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார் என்று சிலர் கூச்ச நாச்சமில்லாமல் சொல்கிறார்கள்..

    Advertisement

    12 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.. 9 சிறுமிகள் கொடூரமான வாக்குமூலம் தந்துள்ளார்கள்.. 11 மாத கால இந்த விவகாரத்தை கிடப்பில் போட்டுள்ளார்கள்.. இதெல்லாம் புரியாமல் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இதை இடைத்தேர்தல் அரசியலோடு முடிச்சுப் போடுகிறார்களே?

    கடந்த 10 15 ஆண்டுகளாக யாரும் செய்யத் துணியாத ஒரு நடவடிக்கையை, ஆட்சிக்கு வந்த 4 மாதங்களிலேயே முதல்வர் விஜய் செய்திருப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது என்பதுதான் உண்மை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Veeramani Case Update.. Did Vijay Watch the Minor’s Statement Video? Don’t Spare Anyone! Shanti’s Reels Stir Controversy