சென்னையில் வழக்கம் போல ஹெவி டிராபிக்! 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

  • சென்னை: தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கியிருக்கும் நிலையில், சென்னையிலிருந்து மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

    Advertisement

    ஒவ்வொரு பண்டிகையின்போதும் மக்கள் சென்னையிலிருந்து வெளியேறுவது இயல்புதான். ஆனால், இந்த டிராபிக் ஜாம்தான் சரியான மாதிரி இல்லை. இந்த வருஷமும் இதே நிலைமைதான்.

    Advertisement

    தமிழ்நாடு முழுவதும் வழக்கம் போல தீபாவளி கொண்டாட்டங்கள் களை கட்டிருக்கின்றன. சென்னையில் இருந்து மக்கள் தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து இருப்பதால் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, தாம்பரம்-கிளாம்பாக்கம் சாலையில் அதிகளவு வாகனங்கள் நெரிசல் ஏற்பட்டிருப்பதால்.. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கனரக வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக கனரக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. குன்றத்தூர் மற்றும் மண்ணிவாக்கம் பகுதிகளில் வணிக ரீதியான வாகனங்கள் செல்ல போலீசார் கட்டுப்பாடு விதித்து வருகின்றனர்.

    Advertisement

    கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கூட.. போக்குவரத்து நெரிசல் குறைந்ததை போல தெரியவில்லை. ரயில், பேருந்து எண்ணிக்கையை அதிகரித்தால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு இருக்கும். கார்கள் போன்ற தனியார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புதான் இந்த டிராபிக் ஜாமுக்கு முக்கிய காரணமாகும்.

    English Summary

    Chennai traffic: With the Diwali celebrations now underway, people have begun leaving Chennai for their hometowns, resulting in a traffic jam that stretches for about 2 kilometers.