ரயிலில் கஞ்சா கடத்தல்.. பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளி கார்த்திக்கை சுற்றி வளைத்த போலீசார்!

  • சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்த மதுரை பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளியான கார்த்திக், பெரம்பூர் ரெயில் நிலையத்தில் வைத்து கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி என்பவரின் முக்கியமான கூட்டாளியாகச் செயல்பட்டு வருபவர் கார்த்திக். இவர் மீதும் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆந்திராவிலிருந்து சென்னைக்கு தொடர்ந்து கஞ்சா கடத்தப்படுவதாகப் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ரயில்வே போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    Advertisement

    இதனைத் தொடர்ந்து சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இன்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவிலிருந்து வந்த ரயிலில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த கார்த்திக்கை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

    அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர் விற்பனைக்காகக் கொண்டு வந்த 4 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கைக் கைது செய்தனர்.

    மேலும் கார்த்திக்கிற்கு பின்னால் உள்ள கஞ்சா கடத்தல் கும்பல் நெட்வொர்க் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளி, கடத்தி வந்த கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Karthik, an associate of the notorious Madurai-based rowdy Vellaikkali, was arrested at the Perambur railway station while smuggling ganja from Andhra Pradesh to Chennai by train.