வேல்முருகன், கிருஷ்ணசாமி, சீமான் மாஸ்டர் பிளான்.. மீண்டும் 3-வது அணி! லாபம் யாருக்கு தெரியுமா

  • சென்னை: வேல்முருகன், கிருஷ்ணசாமி, சீமான், ஆகியோர் பல்வேறு கட்சிகள் அமைப்புகளோடு புதிய கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறார்கள்... இந்த கூட்டணி மாற்றம் தமிழக அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்குமமா என்ற எதிர்பார்ப்பு இப்போதே துவங்கி விட்டது.. இவர்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது, அரசியல் களத்தில் ஏற்படும் தாக்கங்கள் எப்படியிருக்கும்?!!

    Advertisement

    திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டாலும், அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

    Advertisement

    இப்படிப்பட்ட சூழவில்தான், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பமாக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் மற்றும் வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த நகர்வு வரும் சட்டமன்ற இடைத்தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

    மீண்டும் 3வது அணி

    நீண்டகாலமாக தமிழக அரசியலில் நிலவி வந்த இரு துருவ அரசியல் மாற்றத்தை நோக்கி நகர்வதற்கான முயற்சிகள் பலமுறை நடந்துள்ளன. குறிப்பாக, விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவானாலும், அது தேர்தலில் தோல்வியையே தழுவியது.

    Advertisement

    அந்த தோல்விக்கு பிறகு, 3வது அணி அல்லது மாற்றத்திற்கான கூட்டணி என்ற எண்ணம் மக்கள் மத்தியில் கொஞ்சம் மங்கிவிட்டது என்றே சொல்லலாம்.. இப்போதுதான் மீண்டும் அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக தமிழக அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி, வெற்றிப் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது... இது ஒரு சாதனையாகவும் அரசியல் நோக்கர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது..

    வேல்முருகன், கிருஷ்ணசாமி

    கடந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய டாக்டர் கிருஷ்ணசாமி, அது தோல்வியில் முடிந்ததால் தனித்து போட்டியிட்டு பின்னடைவை சந்தித்தார். அதேபோல், திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகன் வெளியேறி தனித்துப் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்தே களம் கண்டது.

    Advertisement

    இந்தத் தேர்தலில், விஜய் ஏற்படுத்திய அலை மற்றும் மக்கள் செல்வாக்கின் காரணமாக திமுக, அதிமுக ஆகிய 2 ஆலமரக் கட்சிகளும் கணிசமான பின்னடைவை சந்தித்தன. இதனால் மற்ற சிறு கட்சிகளின் வாக்கு வங்கியும் செல்வாக்கும் தேர்தலில் எடுபடவில்லை.

    இந்தத் தோல்விகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ள சீமான், கிருஷ்ணசாமி மற்றும் வேல்முருகன் ஆகியோர், சிதறியுள்ள வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளனர்..

    புதிய கூட்டணி

    இதன் விளைவாக, தங்களுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகளை களைந்து, வரவிருக்கும் இடைத்தேர்தலில் ஒன்றாகக் களம் காணத் திட்டமிட்டுள்ளனர். இவர்களுடன் பல்வேறு சிறு அமைப்புகளும் இணைந்திருப்பது கூட்டணியின் பலத்தை அதிகரிக்க செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தமிழக அரசியல் களத்தில் இந்த புதிய கூட்டணி உருவாகியிருப்பது, வரும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து தரப்பு கட்சிகளுக்கும் ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் தங்களது வியூகங்களை வகுத்து வரும் நிலையில், இந்த 3ம் அணியின் வருகை இடைத்தேர்தல் முடிவுகளில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாற்றம் வருமா? தாக்கம் ஏற்படுமா?

    இப்படியொரு அணி உருவாகி உள்ளதால், சில தாக்கங்கள் கண்டிப்பாக அரசியல் களத்தில் ஏற்படும்.. குறிப்பாக, திமுக, அதிமுக இரண்டுமே பாரம்பரியமான கூட்டணி பலத்துடன் செயல்பட்டு வரும் நிலையில், இது போன்ற மாற்று அமைப்புகளின் சங்கமம் அல்லது ஒருங்கிணைப்பு குறிப்பிட்ட சில தொகுதிகளில் தங்களது செல்வாக்கை நிரூபிக்க முயலலாம்.

    Advertisement

    அதேபோல சில குறிப்பிட்ட சமூகங்களின் வாக்குகளை ஒருங்கிணைப்பதும், அதற்கான தளங்களை உருவாக்குவதும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த நகர்வுகள் சாதிய வாக்குகளை மையமாக கொண்டதாகவும் பார்க்கப்படுகிறது.

    தனித்து நிற்பாரே சீமான்?

    இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.. கடந்த கால தேர்தல்களில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து நின்று கணிசமான சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், இது போன்ற மற்ற அமைப்புகளுடன் கைகோர்ப்பது அல்லது இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்துவது பாரம்பரிய கட்சிகளின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

    அதனால், மக்கள் மத்தியில் மாற்றத்தை உண்டாக்கும் சக்தியாக இந்த கூட்டணி உருவெடுக்குமா அல்லது தேர்தல் களத்தில் ஒரு அழுத்தத்தை மட்டும் கொடுக்குமா என்பதற்கு இடைத்தேர்தல் முடிவுகள் விடையாக அமையும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

    English Summary

    Velmurugan, Krishnasamy, Seeman Master Plan.. Third Front Returns! Who Stands to Gain From This Alliance?