பெண்களுக்கு ஜாக்பாட்.. வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு!

  • சென்னை: வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஆடுகள் வழங்க ரூ.109.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் தகுதிவாய்ந்த சுமார் 30,000 பேருக்கு வழங்கப்படவுள்ளது.

    Advertisement

    ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 30,000 தகுதி வாய்ந்த நபர்களுக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு நிர்வாக மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் உயரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    Advertisement

    2026- 2027ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில், கிராமப்புற பெண்களின் மேம்பாட்டுக்காக முக்கிய திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. கிராமப்புற மேம்பாடு, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேளாண் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக கால்நடை பராமரிப்புத் துறை விளங்குகிறது.

    நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்' கீழ் 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். இதன்மூலம், சுமார் 30,000 தகுதி உள்ள நபர்கள் பயனடைவர் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

    Advertisement

    இந்நிலையில் அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், 30,000 தகுதிவாய்ந்த நபர்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்குவதற்காக 2026-27ஆம் நிதி ஆண்டிற்கு 109.75 கோடி ரூபாய்க்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

    English Summary

    Under the Vettri Women's Goat Rearing Scheme, an allocation of Rs. 109.75 crore has been made to provide goats to women. Approximately 30,000 eligible beneficiaries will each receive 5 goats or sheeps at a 100 percent subsidy.